Published on : 11 Jan 2021 19:23 pm
தமிழக அரசு உரிய பாதுகாப்பு வசதிகளுடன் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், மாணவர் விடுதிகள் ஆகிய அனைத்தையும் உரிய பாதுகாப்பு வசதிகளுடன் திறக்க வேண்டும் என வலியுறுத்தி... இந்திய மாணவர் சங்கம் சார்பில் இன்று (11.1.2021) சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதுகுறித்த கோரிக்கை மனுவை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஷ்வரியிடம் அவர்கள் வழங்கினர். படங்கள்: ம.பிரபு
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வருவதையொட்டி... திருநெல்வேலி டவுன் மேற்கு ரத வீதியில் இன்று (11.1.2021) வந்திறங்கிய கரும்புகளால் பொங்கல் விழாவுக்கான கோலாகலம் இப்போதே களைகட்ட ஆரம்பித்துவிட்டது. படங்கள்: மு.லெட்சுமி அருண்
சென்னை - தியாகராய நகரில் அமைந்துள்ள எஸ்.எஸ். ஜெயின் கல்லூரியில் அக்கல்லூரி மாணவிகள் இன்று (11.12021) பொங்கல் விழா கொண்டாடினர். படம்: பு.க.பிரவீன்
பொங்கல் விழாவையொட்டி சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல எழும்பூர் ரயில் நிலைய முன்பதிவு மையத்தில் பதிவு செய்ய இன்று (11.1.2021) ஏராளமானோர் திரண்டிருந்தனர். படங்கள்: பு.க.பிரவீன்
குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850, மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி... தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் இன்று (11.12021) சென்னை - விருந்தினர் மாளிகை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. படங்கள்: பு.க.பிரவீன்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை - மேலூர் அருகே கீழையூர் கிராமத்தில் இருந்து இன்று (11.12021) விற்பனைக்கு எடுத்துச் செல்லப்படும் கரும்புகள். படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
தாம்பரம் - ஜிஎஸ்டி சாலையில் மூன்று வாகனங்கள் தொடர்ந்து மோதிக்கொண்டதில்... கார் ஒன்று நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக காரில் இருந்தவர்கள் உயிர் தப்பினர். இந்த சாலை விபத்தால் இன்று (11.1.2021) ஜிஎஸ்டி சாலையில் நீண்ட தூரத்துக்கு போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. படங்கள்: எம்.முத்துகணேஷ்
இலங்கை முள்ளி வாய்க்கால் நினைவு மண்டபம் தகர்க்கப்பட்டதை கண்டித்து...திமுக மதிமுக, .கம்யூனிஸ்ட் கட்சிகள், வி.சிக, தமிழக வாழ்வுரிமை கட்சியினர் இணைந்து இன்று (11.1.2021) சென்னை - நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். படங்கள் ம.பிரபு
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று (11.1.2021) பொங்கல் விழா சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. இவ்விழாவில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே எஸ் அழகிரி மற்றும் மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள், காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர். படங்கள்: ம.பிரபு