Published on : 22 Dec 2020 19:32 pm

பேசும் படங்கள்... (22.12.2020)

Published on : 22 Dec 2020 19:32 pm

1 / 26

இங்கிலாந்தில் இருந்து 2-வது அலை கரோனா பரவுவதாக ஏற்பட்ட பீதியை அடுத்து... இந்தியாவுக்கு வரும் இங்கிலாந்து விமானங்கள் அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளன. தடை அறிவுப்புக்கு முன்பாக இன்று (22.12.2020) வந்த விமானத்தில் உள்ள பயணிகள் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு... அந்தப் பயணிகள் தனிமைப்படுத்தப்பட்டனர். படங்கள்: எம்.முத்துகணேஷ்

2 / 26
3 / 26
4 / 26

சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டு விமான வருகையின்போது... அனைத்து பயணிகளிடமும் கரோனா சான்றிதழ் சரிபார்த்தப் பின்னரே... வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர். துபாயில் இருந்து இன்று (22.12.2020 ) வந்த விமான பயணி ஒருவரிடம் சான்றிதழ் சரிபார்க்கும் விமான நிலைய சுகாதார ஊழியர். படங்கள்: எம்.முத்துகணேஷ்

5 / 26

பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்களை பணிநீக்கம் செய்யக் கூடாது, ஓராண்டாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி... சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தின் முன்பு... பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் இன்று (22.12.2020) பெருந்திரள் முறையீடு போராட்டம் நடைபெற்றது. படங்கள்: ம.பிரபு

6 / 26
7 / 26

சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று (21.12.2020) மாலை முதல்வர் பழனிசாமி பொங்கல் பரிசுத் திட்டத்தை தொடங்கி வைத்தார். உடன் - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தலைமைச் செயலர், அமைச்சர்கள். படங்கள்: ம.பிரபு

8 / 26
9 / 26

சென்னை - கிண்டியில் உள்ள தனியார் ஓட்டலில் இந்தியத் தேர்தல் ஆணையம் சார்பில் நேற்று (21.12.2020) தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது. இதில் - தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் சத்தியபிரபா சாகு, இந்திய தலைமை தேர்தல் ஆணையச் செயலர் உமேஷ் சின்கா, இந்திய தலைமை தேர்தல் ஆணைய துணை ஆணையர் சுதீப் ஜெயின். படம்: க.ஸ்ரீபரத்

10 / 26

புதிய வேளாண் சட்ட மசோதாக்களையும் மின்சார மசோதாவையும் மத்திய அரசைத் திரும்பப் பெற வலியுறுத்தி... இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் தமிழ்நாடு கிளை சார்பில்... சென்னை - தியாகராய நகர் பேங்க் ஆஃப் பரோடா வங்கி வளாகத்தில் நேற்று (21.12.2020) வங்கி ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். படம்: க.ஸ்ரீபரத்

11 / 26

100 நாள் வேலை திட்டத்தை நகர்புறத்திலும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி... அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின்... அகில இந்திய துணைத் தலைவர் உ.வாசுகி தலைமையில் கிண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நேற்று (21.12.2020) நடைபெற்றது. படம்: க.ஸ்ரீபரத்

12 / 26

பாஜகவின் தமிழக செய்தி தொடர்பாளர் குஷ்பு நேற்று (21.12.2020) மதுரை நகருக்கு வந்திருந்தார். அவருக்கு அக்கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

13 / 26

பாஜகவின் தமிழக செய்தி தொடர்பாளர் குஷ்பு நேற்று (21.12.2020) மதுரை நகருக்கு வந்திருந்தார். அப்போது மதுரை - ஊமச்சிகுளம் பகுதியில் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

14 / 26

சென்னை பெருநகர காவல்துறையின் சார்பில் இன்று (22.12.2020) மாலை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்... சென்னை - பெருநகர காவல் ஆணையர் .மகேஷ்குமார் அகர்வால் கலந்துகொண்டு, சென்னையில் பல்வேறு சம்பவங்களில் காணாமல் மற்றும் திருடுபோய் காவல்துறையினரால் மீட்கப்பட்ட விலையுயர்ந்த சுமார் 863 செல்போன்களை... அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார். படங்கள்: ம.பிரபு

15 / 26
16 / 26
17 / 26
18 / 26
19 / 26
20 / 26

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் நடைபெற்று வரும் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவத்தின் 7- வது நாளான நேற்று (21.12.2020) முத்து கிரீடம், புஜகீர்த்தி, மகர கண்டிகை, ரத்தின அபயஹஸ்தம், மார்பில் லட்சுமி பதக்கம், காசு மாலை உள்ளிட்ட திருவாபரணங்களுடன் பக்தர்களுக்கு சேவை சாதித்த நம்பெருமாள். படம்: ஜி.ஞானவேல்முருகன்.

21 / 26

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் அ.தி.மு.க சார்பில்... நேற்று முன் தினம் (20.12.2020) கிருஸ்துமஸ் விழா நடைபெற்றது. இதில் முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு கேக் வெட்டி கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடினர். படங்கள்: பு.க.பிரவீன்

22 / 26
23 / 26

சென்னையில் நேற்று முன் தினம் (20.12.2020) நடைபெற்ற எழுத்தாளர் பாலகுமாரனின் 2-வது ஆண்டு இலக்கிய விருது வழங்கும் விழாவில்... எழுத்தாளர், கவிஞர் கலாப்பிரியாவுக்கு தமிழக பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் விருது வழங்கினார். உடன், (இடமிருந்து) பத்திரிகையாளர் பாண்டே, பாலகுமாரனின் மகள் ஸ்ரீகெளரி, கவிஞர் ரவி சுப்ரமணியன், பாலகுமாரனின் மனைவிகள் சாந்தா மற்றும் கமலா, பாலகுமாரனின் மகன் சூர்யா. படம்: க.ஸ்ரீபரத்

24 / 26

கடந்த சில நாட்களுக்கு முன்பாக புழுதிவாக்கம் ஏரியில் வளர்ந்திருந்த ஏராளமான ஆகாயத்தாமரைகளை அகற்ற அதிமுக மற்றும் திமுகவினர் இடையே போட்டி நிலவியது. இதையடுத்து மாநகராட்சியினரே ஆகாயத் தாமரையை நீக்கியதால் இப்போது இந்த ஏரி அழகாக காட்சியளிக்கிறது. இதையடுத்து இப்பகுதியினர் ஏரிக்கரையில் மகிழ்ச்சியுடன் உலாவுகின்றனர்.. படங்கள்: எம்.முத்துகணேஷ்

25 / 26
26 / 26

Recently Added

More From This Category

x