Published on : 10 May 2020 21:28 pm

பேசும் படங்கள்... (10.05.2020)

Published on : 10 May 2020 21:28 pm

1 / 17

அன்று சொன்னவை... அர்த்தமுள்ளவை: 'சித்திரை மாதம் நிழலைத் தேடி ஓடுகிறான்... மார்கழி மாதம் வெய்யிலைத் தேடி ஓடுகிறான். இது - ‘அவர்கள்’ படத்தில் கவியரசு கண்ணதாசன் எழுதி புகழ்பெற்ற பாடல். கவியரசர் பாடியதைப் போல எல்லா நெஞ்சங்களும் நிழல் தேடி ஓடிக்கொண்டிருக்கின்றன. இதைத் தொடர்ந்து - நாளுக்கு நாள் கத்திரி வெய்யில் அதிகரித்து வருகிற நிலையில்... சேலத்தில் வெய்யிலின் பிடியில் இருந்து தப்பிக்க சேலம் மாநகராட்சி அலுவலகம் அருகே குடைபிடித்து செல்லும் பெண்கள். படம்: எஸ்.குரு பிரிசாத்

2 / 17

காத்திருப்பும் ஓர் அவஸ்தைதான்: தமிழக அரசு அனுமதியுடன் சொந்த ஊர்களுக்கு செல்லும் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து நேற்று இரவு மணிப்பூர், ஆந்திராவுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இந்தச் சிறப்பு ரயில்களில் பயணம் செய்ய சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் நுழைவுப் பகுதியில் நீண்ட வரிசையில் காத்திருந்த பயணிகள். படம்: க.ஸ்ரீபரத்

3 / 17

தாயில்லாமல் நாயில்லை; இன்று அன்னையர் தினம் தான் பசித்திருக்க தனது குழந்தைகளுக்கு எப்படியும் உணவிடுவதுதான் .. . அன்னையின் சிறப்பே! குழந்தைகளுக்கு உணவு புகட்டுவது என்பதே ஒரு ஒரு கலை . இங்கு ஊரடங்கு உத்தரவால் உணவு கிடைக்காத சூழ்நிலையிலும் தனது குட்டிகளுக்குப் பால் புகட்டும் ஒரு நாலுகால் தாய் .. இடம் - திருநெல்வேலி சந்திப்பு . படம் : மு. லெட்சுமி அருண்

4 / 17

கிணற்றுக்குள் குற்றாலம்: ஊரடங்கு உத்தரவு ஓரளவுக்கு தளர்வுக்கு வந்துள்ளது... நடப்பது கோடைக்காலம் வேறு, சிறுவர்களுக்கு விடுமுறை தினம் வேறு,கேட்கவா வேண்டும். திருப்பணி கரிசல்குளம் பகுதியில் உள்ள விவசாயக் கிணற்றில் குதித்து கும்மாளமிடுகிறார்கள் சிறுவர்கள் . குளிய்ச்ல் கும்மாளத்துக்கு நடுவே குற்றால தரிசனம்! படம்: மு.லெட்சுமி அருண் .

5 / 17
6 / 17

போடு பாலம் போடு! மதுரையில் இருந்து சென்னை செல்லும் சுமார் ஏழரை கிலோ மீட்டர் வரை பறக்கும் பாலத்தின் கட்டுமானப் பணிகள்144 தடை உத்தரவால் பாதிக்கப்பட்டு இருந்தது .தற்போது மீண்டும் சுறுசுறுப்பாகப் பணிகள் தொடங்கியுள்ளன. படம்: கிருஷ்ணமூர்த்தி

7 / 17

மது பாட்டிலுக்கு போலீஸ் பாதுகாப்பு: மதுபானக் கடைகளைத் திறப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் திடீர் தடை உத்தரவிட்டுள்ள நிலையில், மதுரை கூடல்நகர் பகுதி மதுபானக் கடைக்குள் இருக்கும் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்களைப் பாதுகாக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுபானக் கடைக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. படம் : எஸ் கிருஷ்ணமூர்த்தி

8 / 17

மயிலிறகு மனசுக்காரர்: மீனாட்சி அம்மன் என்றதும் ஞாபகத்துக்கு வரும் பெயர் நடராஜன். ’மயிலிறகு தாத்தா’ என்று பக்தர்களால் அழைக்கப்படும் இவர், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு மயிலிறகு விசிறியால் காற்று வீசுவதை தனது சேவையாகச் செய்து கொண்டிருப்பவர். ஊரடங்கு காரணமாக கோயில் மூடப் பட்டிருப்பதால் 50 நாட்களாக சேவை செய்ய முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் தாத்தா, அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்காக வீதியில் நடந்து வந்தபோது எடுத்த படம் இது. படம்: கிருஷ்ணமூர்த்தி

9 / 17

வடக்கிலிருந்து தெற்கு நோக்கி: மகாராஷ்டிரா மாநிலம் சோழாப்பூர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழகத்தின் 34 மாவட்டங்களைச் சேர்ந்த 962 தொழிலாளர்கள் சிறப்பு ரயில் மூலம் திருச்சிக்கு அழைத்துவரப்பட்டு பின்னர், அரசுப் பேருந்துகளில் அவரவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். படம்: ஜி.ஞானவேல்முருகன்

10 / 17

தொடர்வண்டி நிலையம் முழுக்க தூய்மை: திருச்சிக்கு சிறப்பு ரயில் வந்ததையடுத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரயில்வே வளாகம் முழுவதும் ஊழியர்கள் கிருமிநாசினி தெளித்தனர். படம்: ஜி.ஞானவேல்முருகன்.

11 / 17

கரோனா அப்டேட் சந்திப்பு: சென்னை 5 - வது மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கரோனா தொற்றின் தற்போதைய நிலை குறித்து விளக்குகிறார் வருவாய்த் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன். படம்: க.ஸ்ரீபரத்

12 / 17

கட்டுக்குள் அடங்காத கூட்டம்: பார்ப்பதற்கு தி. நகர் ரங்கநாதன் சாலையைப் போல இருக்கும் இந்த இடம் வேறு எங்கும் இல்லை. சென்னை கிருஷ்ணாம்பேட்டை மார்க்கெட்தான் இது. இங்கு கூடியோர் - சமூக இடைவெளியைத் துச்சமாக நினைத்துவிட்டனரோ என்னவோ? அவ்வளவு அலட்சியமாக ஞாயிற்றுக்கிழமை மாமிசம் மற்றும் காய்கறி வேட்டைக்காகத் திரண்டுள்ளனர். கரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் எகிறிக் கொண்டே போகிற நிலையில் - கவனமாக இருந்தால் மட்டுமே கரோனாவை நாட்டை விட்டுத் துரத்த முடியும் . படம் : க .ஸ்ரீபரத்

13 / 17

வெரசா போங்க ஒடிசா! சென்னையில் இருந்து தங்கள் சொந்த மாநிலமான ஒடிசாவுக்குச் செல்ல நேற்று முன் தினம் (9.5.2020) சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காத்திருக்கும் ஒடிசாவைச் சேர்ந்த தொழிலாளர்கள். படம்.க,ஸ்ரீபரத்

14 / 17
15 / 17

காட்டுக்குள்ளும் கத்திரி; கத்திரி வெயிலில் தொடங்கியுள்ளதைஅடுத்து சேலம் மாவட்டத்தில் வெய்யிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தவாறே உள்ளது. இதனால் ஏற்காடு மலையில் பெரும்பாலான பகுதி வறட்சியுடன் உள்ளது. இதன் விளைவாக ஏற்காடு மலைப் பகுதியில் இன்று (10.5.2020) மாலை காட்டுத் தீ பரவி .செந்நிறத்தில் கொழுந்து விட்டு எரிந்தத்1. படம்: எஸ்.குருபிரசாத்

16 / 17

ஞாயிற்றுக் கிழமை ஸ்பெஷல்: கரோனா நோயால் பாதிக்கப்பட்டு அரசு ஒமந்துரார் மருத்துமனை சிகச்சை பெற்று வருபவர்களுக்கு இன்று அசைவ உணவு மற்றும் சைவ உணவுகள் வழங்கப்பட்டது. படங்கள்: எல் .சீனிவாசன்

17 / 17

Recently Added

More From This Category