Published on : 30 Apr 2020 22:06 pm

இன்றைய ( 30.04.2020) புகைப்பட செய்திகள்

Published on : 30 Apr 2020 22:06 pm

1 / 90

144 தடை உத்தரவு தொடர்ந்து முழு அடைப்பு இருந்ததால் இன்று ஏப்ரல் 30 மதுரை சிந்தாமணி பகுதியில் செயின் மேரி பெண்கள் பள்ளி மைதானத்தில் காய்கறி வாங்க திரண்ட கூட்டம்! படம் எஸ் கிருஷ்ணமூர்த்தி

2 / 90
3 / 90

144 தடை உத்தரவை தொடர்ந்து முழு அடைப்பு அறிவித்ததால் மதுரை திண்டுக்கல் ரோட்டில் மளிகை பொருட்கள் மற்றும் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்க குவிந்த பொதுமக்கள்! படம் எஸ் கிருஷ்ணமூர்த்தி

4 / 90
5 / 90

‘கோவிட்19' தொற்றுநோய் மதுரை பகுதியில் தொடர்ந்து இருப்பதால் சிந்தாமணி ரோட்டில் உள்ள பகுதியில் பிளீச்சிங் பவுடர் தெளிக்கும் மாநகராட்சி ஊழியர்! படம் எஸ் கிருஷ்ணமூர்த்தி

6 / 90

கோடை வெயில் காரணமாக விற்கப்படும் தர்பூசணி பழங்கள் மதுரா கல்லூரி அருகே இரண்டாக வெட்டி விற்பதால் அதை சாப்பிடும் பொழுது நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளன. இதை கண்டுகொள்ளாத மாநகராட்சி அதிகாரிகள்! படம் இஸ் கிருஷ்ணமூர்த்தி

7 / 90

‘கோவிட் 19" தொற்றுநோய் வைரஸ் தொடர்பான மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்த் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் தலைமையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் மாவட்ட ஆட்சியர் வினய் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் விசாகன் கலந்துகொண்டார்கள்! படம் எஸ் கிருஷ்ணமூர்த்தி

8 / 90
9 / 90
10 / 90

மதுரை சமயநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் விளாங்குடி சேர்ந்த பெண் ஒருவருக்கு 'கோவிட் 19" வைரஸ் தொற்றுநோய் ஏற்பட்டதால் கிருமி நாசினி அடிக்கப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மூடப்பட்டது. படம் ;எஸ் படம் கிருஷ்ணமூர்த்தி

11 / 90
12 / 90

144 தடை உத்தரவு நான்கு நாட்கள் தொடர்ந்து நடைபெற்றதால் இன்று ஏப்ரல் 30 மதுரை தெற்குவாசல் மீன் மார்க்கெட்டில் குவிந்த மக்கள்! படம் எஸ் கிருஷ்ணமூர்த்தி

13 / 90
14 / 90

கோடைகாலம் ஆரம்பித்து விட்டதால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. மேலும் வாட்டர் டேங் பழுது ஏற்பட்டதால் கடந்த சில நாட்களாக பாளையங்கோட்டை பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டது . அதனால் பொதுமக்களுக்கு லாரிகளில் குடிநீர் விநியோகம் செய்தது மாநகராட்சி நிர்வாகம் .. பொதுமக்கள் சைக்கிளிலும், கூடங்களிலும் குடங்களை கொண்டு வந்து குடிநீர் நிரப்பி சென்றனர் . படங்கள் . மு. லெட்சுமி அருண் .

15 / 90
16 / 90
17 / 90

மதுரையடுத்த வேடர்புளிங்குளம் பகுதியைச் சேர்ந்த விவசாயி மழை தண்ணீர் இல்லாமல் வரண்டு கிடக்கும் பகுதியில் கொரோனா தெற்று பரவலால் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் ஆடு மேய்க்க புறப்பட்டனர்! பச்சைப்புல் இல்லாத சூழ்நிலையில் கஞ்சி சட்டியை எடுத்துக் கொண்டு பச்சை புல் இருக்கும் திசை நோக்கி ஆடுகளை மேய்க்க சென்றனர். வறண்ட நாவுடன் ஆடுகளை ஹே ஹே என்ற வார்த்தையால் கட்டுப்படுத்தி பொழுது சாய்வதற்குள் ஆட்டின் வயிற்றை நிரப்பி வீட்டுக்கு கூட்டிசெல்ல வேண்டும் என்ற நினைப்போடு சென்றுகொண்டிருந்தவரை அருகில் சென்று நிலவரம் குறித்து விசாரித்தபோது, ஐயா மழை இல்ல பூமி வரண்டு கிடக்கு ஆடு மேய்ச்சு பொழப்பு நடத்துறத தவிர எனக்கு வேறு தொழில் இல்ல இப்போ ஆட்டுக் கறிக்கு நல்ல விலை இருக்கு கடையில ஒரு கிலோ கறி 800, 1000 ரூபாய்க்கு விக்குறாங்க. ஆனா எங்ககிட்ட இன்னும் கிலோ 400க்கு தான் வாங்குறாங்க என்ன செய்ய வேறு வழி இல்லை என்று கூறினார். படம் தகவல் க.ஸ்ரீ பரத்

18 / 90
19 / 90
20 / 90
21 / 90

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது . அதனால் பஸ் மற்றும் ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. மே 3 வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது . அதன்பிறகு எப்பொழுது வேண்டுமானாலும் போக்குவரத்து அனுமதிக்கப்படலாம் என்று கருதப்படுகிறது . எப்போதும் பரபரப்பாக இயங்கும் பாளையங்கோட்டை குலாவணிகர்புறம் ரயில்வே கேட்டை சரி செய்யும் பணியில் ரயில்வே பணியாளர்கள் . படங்கள் : மு . லெட்சுமி அருண் .

22 / 90
23 / 90

சேலத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அரசு மருத்துவமனைகள், பொது மக்கள் கூடும் உழவர் சந்தைகள், அரசு அலுவலகங்களில் தொடர்ந்து கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் , ஆட்சியரின் கார் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது. படம்:எஸ்.குரு பிரசாத்

24 / 90
25 / 90
26 / 90

வடமலை குறிச்சி டூ குல்லுர் சந்தை செல்லும் கவுசிகா நதி புதர் மண்டி கிடக்கிறது. விருதுநகர் புது பஸ் ஸ்டேண்ட் செல்லும் சாலையில் உள்ள பாலத்தின் அருகில் எடுத்த படம்! படங்கள்: க.ஸ்ரீ பரத்

27 / 90
28 / 90
29 / 90

முழு ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதால் கோவை ராஜவீதியில் வாகன ஓட்டிகளை  ஒலிப்பெருக்கி மூலம் ஒழுங்குப்படுத்தும் போலீசார்! படம் :ஜெ .மனோகரன்

30 / 90

முழு ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதால் கோவை ரங்கேகௌடர் சாலையில் உள்ள மொத்த விலை  மார்க்கெட்டில் பொருட்கள் வாங்க குவிந்த மக்கள் கூட்டம்! படம் :ஜெ .மனோகரன்

31 / 90
32 / 90
33 / 90
34 / 90
35 / 90
36 / 90

முழு ஊரடங்கு தளர்த்த பட்டுள்ளதால் கோவை பீளமேடு பகுதியில் சமீபத்தில் முளைத்திருக்கும் சாலையோரக் கடைகள்! படம் ஜெ .மனோகரன்

37 / 90

கொரோனா எதிரொலியால் கோவை  சந்திரகாந்தி நகர் பகுதியில்  வீட்டிலேயே  தன் மகனுக்கு முடிதிருத்தும் தாய்! படம் :ஜெ .மனோகரன்

38 / 90
39 / 90
40 / 90
41 / 90
42 / 90

சென்னையில் அனைத்து இடங்களிலும் அருகேயே சந்தைகள் உள்ளதால் வாகனங்களை தவிர்க்க அரசு சார்பில் மற்றும் காவல்துறை ஆணையர் வீடியோ வெளியிட்டும் உத்தரவை காற்றில் பறக்க விட்ட மக்கள்! இடங்கள் கோயம்பேடு, பெரம்பூர் மாதாவரம் நெடுஞ்சாலை, அயானாவரம் பகுதிகள்! படங்கள் ம.பிரபு

43 / 90
44 / 90
45 / 90
46 / 90
47 / 90

கோயம்பேடு மார்கெட் பகுதி பணியில் ஈடுப்பட்ட காவல் அதிகாரிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் சில்லறை விற்பனை முழுவதுமாகவும் மொத்த விற்பனை சில கடைகள் மட்டுமே செயல்பட்டன! அதே போன்று அனைத்து பக்கமும் சாலைகள் அடைக்கப்பட்டு உரிய அனுமதி பெற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்! உள்ளே இருப்பவர்களும் தேடி சென்று பரிசோதனை செய்யும் மருத்துவ குழுவினர்! படங்கள் ம.பிரபு

48 / 90
49 / 90
50 / 90
51 / 90
52 / 90
53 / 90
54 / 90
55 / 90
56 / 90

கடும் வெயிலில் பென்ஷன் பணம் எடுக்க முதியவர்களும் தேவைக்கு பணம் பொதுமக்களும் வங்கி முன்பு வரிசையில் காத்திருகின்றனர்! இடம் பெரம்பூர் எருக்கஞ்சேரி இந்தியன் வங்கி! படம்; ம.பிரபு

57 / 90
58 / 90

கொரோனா தொற்றுக் காரணமாக கோயம்பேடு சில்லறை கடைகள் அனைத்தும் மூடப்பட்டதால் சென்னை சுற்றி 4 முக்கிய இடங்களில் தற்காலிகமாக கடைகள் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றனர்! மாதவரம் இரண்டு அடுக்கு பேருந்து நிலையத்தை தற்காலிக சில்லறை கடைகள் அமைத்து தாயார் நிலையில் உள்ளன! படங்கள் ம.பிரபு

59 / 90
60 / 90
61 / 90
62 / 90
63 / 90

அயானாவரம் -ஓட்டேரி செல்லும் கொன்னூர் நெடுஞ்சாலையில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட காய்கறி சந்தையில் சமூக இடைவெளி இல்லாமல் கூடிய மக்கள் கூட்டம்! படம்;ம.பிரபு

64 / 90
65 / 90

செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழி பகுதியில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஊரடங்கு உத்தரவை அடுத்து வெறிச்சோடி கிடந்தது. அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் கரொனா வைரஸ் மாதிரி உருவ பொம்மையை சாலையின் நடுவே அமைத்துள்ளனர். படங்கள் எம்.முத்து கணேஷ்

66 / 90
67 / 90

விவசாய பணிக்கு ஊரடங்கு உத்தரவிலிருந்து அரசு விலக்கு அளித்ததையொட்டி மதுராந்தகம் பகுதியில் நடவு பணிக்கு செல்லும் பெண்கள்! - படங்கள் எம்.முத்து கணேஷ்

68 / 90
69 / 90

நாலு நாட்கள் முழு அடைப்பை அடுத்து சென்னை திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து அதிகமாக காணப்பட்டது. செங்கல்பட்டு பரனூர் சுங்கச் சாவடியில் வந்த வாகனங்களை போலீசார் சோதனை செய்து, முகக் கவசம் அணியாதவர்களுக்கு முக கவசம் வழங்கி பின்னர் அனுப்பினர். படங்கள் எம்.முத்து கணேஷ்

70 / 90
71 / 90
72 / 90
73 / 90

உழைக்கும் வர்க்கத்தினரை கரோனா ஊரடங்கு முடக்கினாலும் சாலையோரம் வசிக்கும் கல் கொத்தனார்களின் உழைப்பை மட்டும் முடக்க முடியவில்லை. ஊரடங்கால் வருவாய் பாதிக்கப்பட்டாலும் தங்களது வழக்கமான பணியை சுட்டெரிக்கும் வெயிலிலும் குடும்பத்துடன் மேற்கொண்டு வருகின்றனர். இடம்: வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில். படம்: விஎம்.மணிநாதன்.

74 / 90
75 / 90

காட்பாடி பகுதியில் அத்தியாவாசிய தேவையின்றி சுற்றுபவர்களின் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்த காவல்துறையினர். படம்: வி.எம்.மணிநாதன்.

76 / 90
77 / 90
78 / 90

காட்பாடி ரயில் நிலையம் நுழைவு வாயிலில் வரையப்பட்டுள்ள கரோனா வைரஸ் விழிப்புணர்வு ஓவியம். படம்: வி.எம்.மணிநாதன்.

79 / 90
80 / 90

ஆந்திர மாநிலம், சித்தூரில் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து, காட்பாடி அடுத்த கிறிஸ்டியான் பேட்டை பகுதி தமிழக ஆந்திர எல்லையில் உள்ள சோதனை சாவடியில் தமிழக எல்லைக்குள் அத்தியாவாசிய பொருட்களை ஏற்றி வரும் வாகன ஓட்டுநர்களுக்கு மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் காய்ச்சல் உள்ளதா என உடல் வெப்பநிலையை கருவி மூலம் பரிசோதனை செய்து மாநகராட்சி ஊழியர்கள் வாகனங்களுக்கு கிருமி நாசினி மருந்து தெளித்து வருகின்றனர். படம்: வி.எம்.மணிநாதன்.

81 / 90
82 / 90
83 / 90

ஆந்திர மாநிலம், சித்தூரில் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து, காட்பாடி அடுத்த கிறிஸ்டியான் பேட்டை பகுதி தமிழக ஆந்திர எல்லையில் உள்ள சோதனை சாவடியில் தமிழக எல்லைக்குள் அத்தியாவாசிய பொருட்களை ஏற்றி வாகனங்களுக்கு மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில் கிருமி நாசினி மருந்து தெளித்து தமிழக எல்லைக்குள் அனுப்பி வைக்கப்படுகின்றது. படம்: வி.எம்.மணிநாதன்.

84 / 90
85 / 90
86 / 90

கரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களுக்கு வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது. படம்: வி.எம்.மணிநாதன்.

87 / 90
88 / 90
89 / 90

வெயிலில் இருந்து தன்னை பாதுகாக்க குடை பிடித்து வண்டியில் அமர்ந்து இருக்கும் சிறுமி. இடம் வேளச்சேரி மெயின் ரோடு சேலையூர். படங்கள்: ஸ்டாலின்

90 / 90

Recently Added

More From This Category

x