Published on : 28 Apr 2020 20:45 pm

இன்றைய ( 28.04.2020) புகைப்பட செய்திகள்

Published on : 28 Apr 2020 20:45 pm

1 / 86

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 144 தடை உத்தரவை முன்னிட்டு வருடாந்திர நேர்காணல் நடைபெறும் ஓய்வூதியர்கள் இனி ஜூலை ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நடைபெறும் என மாவட்ட கருவூலத்தில் வரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று அங்கு வைக்கப்பட்டுள்ள பேனர்கள்! படங்கள்: எஸ் கிருஷ்ணமூர்த்தி

2 / 86
3 / 86

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அடுத்தகட்டமாக முதல் மாடியில் உள்ள ஆட்சியரை அலுவகத்தின் முன்பு தீயணைப்பு வீரர்கள் மூலம் கிருமி நாசினி அடிக்கப்பட்டது. படங்கள்: எஸ் கிருஷ்ணமூர்த்தி

4 / 86
5 / 86

மதுரை மாவட்ட மாநகராட்சி உட்பட்ட கோரிப்பாளையம் தேவர் சிலை அருகே பகுதிகளில் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு நடைபெறுவதால் குவிக்கப்பட்ட தக்காளியின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது! படம் எஸ் கிருஷ்ணமூர்த்தி

6 / 86
7 / 86

தென் மாவட்டங்களில் மிகமிக சிறப்பாக கொண்டாடப்படும் மதுரை சித்திரைத் திருவிழாவின் ஒரு பகுதியான கள்ளழகர் மதுரை வைகை ஆற்றில் இறங்கும் விழாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டதால் எந்த ஏற்பாடுகள் இன்றி வெறிச்சோடி காணப்படும் வைகை ஆறு! படம் எஸ் கிருஷ்ணமூர்த்தி

8 / 86
9 / 86
10 / 86

‘கோவிட் 19' வைரஸ் தொற்று நோய் காரணமாக 144 தடை உத்தரவால் வேலை இழந்து உள்ள மதுரை மாநகராட்சி உட்பட்ட பெரியார் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள மேலவாசல் பகுதியில் அம்மா உணவகத்தில் உணவு அருந்த வந்த குழந்தைகள் மற்றும் அப்பகுதி மக்கள்! படம் எஸ் கிருஷ்ணமூர்த்தி

11 / 86
12 / 86
13 / 86
14 / 86

தற்போது கோடைகாலம் ஆரம்பித்து விட்டதால் 100 டிகிரி வரைக்கும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது..பொதுமக்கள் எல்லோரும் வீட்டில் இருப்பதால் குடிதண்ணீரின் தேவை அதிகரித்து வருகிறது .ஒரு கேன் 25 ரூபாய் முதல் 30 ரூபாய் வரைக்கும் விற்கப்படுகிறது. .பாளையங்கோட்டை பகுதியில் தண்ணீர் கேன் விற்கும் தொழிலாளி குடிதண்ணீர் கேன்களை வீடுகளுக்கு கொண்டு செல்லும் வேலையில் மும்முரமாக இருக்கிறார்! படங்கள் . மு. லெட்சுமி அருண்

15 / 86
16 / 86
17 / 86

மதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணி கரோனா ஊரடங்கால் நிறுத்தி வைப்பு! படம்: ஜி.ஸ்ரீபரத்

18 / 86
19 / 86
20 / 86

கோடைகாலம் ஆரம்பித்து விட்டது , குடிப்பதற்கு சரியாக தண்ணீர் கிடைப்பதில்லை , கொரோனா ஊரடங்கு உத்தரவினால் உணவகங்கள் மற்றும் உணவு பதார்த்தங்கள் கடைகள் யாவும் மூடப்பட்டு காட்சியளிக்கின்றன. இப்படி பல்வேறுபட்ட வகையில் நெருக்கடிகளில் சிக்கி அவதிப்பட்டுக்கொண்டிருக்கின்றன ஆதரவற்ற விலங்குகள். அவைகளுக்கும் உணவு மற்றும் உதவிகள் கிடைத்திட அரசு உதவிட வேண்டும் என்று கோரிக்கைவிடுக்கிறார்கள் விலங்கு நல ஆர்வலர்கள். திருநெல்வேலி சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தின் கீழ் பாலத்தில் உணவில்லாமல் பசியுடன் சுருண்டு படுத்திருக்கும் ஒரு குட்டி நாய். படங்கள் . மு. லெட்சுமி அருண்

21 / 86
22 / 86

மதுரை திருநகர் அருகில் 144 தடை உத்தரவின் போது வெளியில் செல்லபவர்களை சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள NCC மாணவர்கள்@ படம். க. ஸ்ரீ பரத்

23 / 86
24 / 86
25 / 86

மதுரை திருப்பரங்குன்றம் தென்கரை கண்மாய் (தேங்காய் கண்மாய்) மதுரை திருப்பரங்குன்றம் பகுதி மக்களுக்கு சிறிய கடல் போல் காட்சி தரும் இந்த கண்மாயில் தண்ணீர் நிரம்பி இருக்கும் போது திருப்பரங்குன்றம் மலை பிரதிபலிக்கும் கண்கொள்ளாக் காட்சி பார்ப்பதற்கு ரம்மியமாக இருக்கும். இந்த கண்மாயில் குளிப்பதற்காக மக்கள் கூட்டம் கூட்டமாக வருவர். தற்போது கொரோனா தெற்று காரணத்தால் தமிழக அரசு அறிவித்துள்ள 144 தடை உத்திரவு அமலில் உள்ளதால் இங்கு யாரும் வருவதில்லை. அப்படி யாருமே வராத இடத்தில் ஒரு சலவை தொழிலாளி மட்டும் பச்சை நிற புள்வெளி மீது வானவில்லை விரித்து வைத்தது போல சலவை செய்த துணிகளை காயவைத்துக் கொண்டிருந்தார். அருகில் சென்று அவரிடம் கேட்டபோது , திருப்பரங்குன்றத்தில் லாண்டரி கடை வைத்திருந்தேன் கொரோனா தோற்று காரணத்தால் கடையை அடைத்து வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. வருமானம் சுண்டிப்போச்சு என்ன செய்றதுன்னு தெரியல. அப்போ எனக்கு ஒரு யோசனை வந்துச்சு என்னான்னா வாடிக்கையா சலவைக்கு துணி போடுறவுங்க வீட்டுக்கு போய் அவுங்க வீட்டுலயே சுடு தண்ணீ வச்சு அதுல அழுக்கு துணிகளை அமுக்கி சோப்பு பவுடர போட்டு கசக்கி பிளிஞ்சு எடுத்து வந்து பிறகு கண்மாயில வச்சு துவச்சு காயப்போட்டு அயன் செய்து கொடுக்குறதுன்னு. இந்த சிஸ்டம் நல்ல செட்டாச்சு. இப்போ ஒரு நாளைக்கு 4,5, வீட்டு துணிகளை துவச்சி கொடுக்கிறோம். ஏதோ போதுமான வருமானம் வருவதாக கூறினார் - படம் தகவல க. ஸ்ரீபரத்

26 / 86
27 / 86
28 / 86

எப்போதும் பரபரப்பாக இயங்கிகொண்டிருக்கும் சென்னை உள், வெளிநாட்டு விமான நிலையங்கள் இப்போது கரோனா பாதிப்பால் வெறிச்சோடி பரிதாபமாக காட்சியளிக்கிறது. விமான நிலையத்தின் உட்பகுதியிலோ விமானங்கள் வரிசையாகவும் ,ஒன்றை ஒன்று எதிர்நோக்கியும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. படங்கள்: எம்.முத்துகணேஷ்

29 / 86
30 / 86
31 / 86
32 / 86
33 / 86

தாம்பரம் அடுத்த மணிமங்களம் பகுதியில் அறுவடை காலம் இது. தற்போது ஏற்பட்டுள்ள வெப்பச்சலனத்தால் அவ்வப்போது மழை பெய்கிறது. இதனால் விளைந்த நெற்பயிர்கள் சாய்ந்து முளைத்து விடுகிறது. அவசர கதியில் அறுத்து களம் சேர்த்தால் அரசு கொள்முதல் செய்யாமல் அலட்சியம் காட்டுகிறது. நெல்மணிகளை பாதுகாக்க விவசாயிகளுக்கு கூடங்கள் அமைத்து கொடுக்க வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கை. ஆண்டு முழுவதும் பட்ட விவசாயத்தின் கஷ்டத்தை கரோனா, மழை என இயற்கை இடர்பாடுகள் நோகடிக்கின்றன. அரசு உதவினால் மட்டுமே எங்களுக்கு காலம் என புலம்புகின்றனர். -படங்கள்:எம்.முத்துகணேஷ்

34 / 86
35 / 86
36 / 86
37 / 86

சேலத்தில் முழு ஊரடங்கு காரணமாக மருந்து கடைகள் தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தது. இதனால் சேலம் சின்னத்திருப்பதி பகுதியில் வாழைப்பங்கள் விற்பனை செய்ய முடியாமல் போனதால் வீணாகிய நிலையில் உள்ளது. இதில் நல்ல நிலையில் உள்ள சில பழங்களை தரம் பிரித்து வைக்கும் வியாபாரி. சின்னத்திருப்பதி பகுதியில் உள்ள குடோன்களில் மட்டும் சுமார் 10 லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் வேதனையுடன் தெரிவித்தனர். படம்: எஸ்.குரு பிரசாத்

38 / 86
39 / 86

கோடை தொடங்கியதையொட்டி  வேகமாக நீர்நிலைகள் வற்றிவருகிறது கோவை சித்திரைசாவடி நோய்யல் ஆற்றில் தண்ணீரை தேடி அலையும் கால்நடைகள். படம் :ஜெ .மனோகரன்

40 / 86

கோவை பூலுவம்பட்டி பகுதியில் வீரிய ஒட்டுரக நாட்டு தக்காளி மற்றும் மிளகாய் செடி நாற்றங்காலுக்கு தண்ணீர் பீழ்ச்சியடிக்கும் விவசாயி.. படம் :ஜெ .மனோகரன்

41 / 86
42 / 86

ஓடி ஆடி விளையாடும் இந்த வயதில் உணவை தேடி ஒரு பயணம். கோயம்பேடு அருகே வசிக்கும் இந்த சிறுவர்கள் முழு ஊரங்கு காரணமாக உணவு தேடி வந்து கொடுத்தவர்கள் தற்போது இவர்களே உணவை தேடி சென்று கிடைக்கும் இடத்தில் வரிசையில் நின்று வாங்கும் நிலை! படம் ம.பிரபு

43 / 86
44 / 86
45 / 86

எப்போதும் பரப்பரப்பாக .இயக்கும் சென்னை மாநகர் கொரோ னா தடை காலத்தில் அமைதியாக அழகாக வானிலிருந்து ஒரு பார்வை தொகுப்பு படங்கள் ம. பிரபு

46 / 86

சென்னை மெரினா

47 / 86

பாடி மேம்பாலம்

48 / 86

காசிமேடு மீன்பிடி துறைமுகம்

49 / 86

கூவம் ஆறு போல புதுப்பேட்டை

50 / 86

சென்னை துறைமுகம்

51 / 86

சென்ட்ரல், GH,சென்னை மாநகராட்சி, தெற்கு ரயில்வே கட்டிடம், மருத்துவ கல்லூரி, நேரு விளையாட்டு அரங்கம், கூவம் ஆறு, பல்லவன் இல்லத்தில் ஓய்வு எடுக்கும் பஸ்கள்!

52 / 86

புழல் ஏரி

53 / 86

துறைமுகத்தில் தேங்கியுள்ள வாகனங்கள்

54 / 86

அண்ணாசாலை

55 / 86

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஓய்வு எடுக்கும் ரயில்கள்

56 / 86
57 / 86

புதுச்சேரி தலைமைச்செயலகத்தில் நடந்த பேரிடர் மேலாண்மை துறை சார்பில் கொரோனா பாதிப்பு குறித்து நடைபெற்ற கூட்டத்தில் முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, கமலக்கண்ணன் தலைமைச்செயலர் அஸ்வனிக்குமார், மாவட்ட ஆட்சியர் அருண் ஆகியோர் கலந்துகொண்டனர். படம்.எம்.சாம்ராஜ்

58 / 86
59 / 86

சென்னையில் முழு ஊரடங்கு துவக்கமே மழையில் ஆரம்பித்தது. சூறைகாற்றுடன் பெய்த மழையால் நங்கநல்லூர் பகுதியில் சாலையில் உள்ள பல மரங்கள் முறிந்து விழுந்தன. மின் கம்பங்களும் சாய்ந்தன. தாம்பரம் பகுதியில் பெய்த மழையில் ஒருசில வாகனங்கள் ஜிஎஸ்டி சாலையில் ஊர்ந்து சென்றன. படங்கள்:எம்.முத்துகணேஷ்

60 / 86
61 / 86
62 / 86
63 / 86
64 / 86
65 / 86

கத்திபாரா, ஆலந்தூர், பல்லாவரம், குரோம்பேட்டை பகுதிகளில் ஊரடங்கு முழுமையாக காணப்பட்டது. சாலைகளில் வாகனங்களின்றி வெறிச்சோடியது . ஒருசில வாகனங்களையும் போலீசார் நிறுத்தி சோதனை செய்தபின்னரே அனுமதித்தனர். அம்மா உணவகங்கள் மட்டும் இயங்கியதால் மக்கள் வரிசையில் நின்று உணவு அருந்தினர். படங்கள்: எம்.முத்துகணேஷ்

66 / 86
67 / 86
68 / 86
69 / 86
70 / 86
71 / 86
72 / 86
73 / 86

கத்திபாரா, ஆலந்தூர், பல்லாவரம், குரோம்பேட்டை பகுதிகளில் ஊரடங்கு முழுமையாக காணப்பட்டது. சாலைகளில் வாகனங்களின்றி வெறிச்சோடியது . ஒருசில வாகனங்களையும் போலீசார் நிறுத்தி சோதனை செய்தபின்னரே அனுமதித்தனர். அம்மா உணவகங்கள் மட்டும் இயங்கியதால் மக்கள் வரிசையில் நின்று உணவு அருந்தினர். படங்கள்: எம்.முத்துகணேஷ்

74 / 86
75 / 86
76 / 86
77 / 86

கோடை தொடங்கியதையொட்டி வேகமாக நீர்நிலைகள் வற்றிவருகிறது இதையடுத்து கோவை சித்திரைசாவடி நோய்யல் ஆற்றில் தண்ணீரை தேடி அலையும் கால்நடைகள். படம் :ஜெ .மனோகரன்

78 / 86
79 / 86

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சுகாதார பணிகள் துணை இயக்குநர் அலுவலகத்தில் தற்காலிக சுகாதார ஆய்வாளர் பணிக்கு பணி நியமன ஆணை வாங்க காத்திருந்தோர். படம்: வி.எம்.ணிநாதன்.

80 / 86
81 / 86

கரோனா வைரஸ் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க போடப்பட்டுள்ள வட்டத்தில் நின்று மின்சார கட்டணத்தை செலுத்தும் மக்கள். படம்: வி.எம்.மணிநாதன்.

82 / 86
83 / 86
84 / 86

வேலூரில் ஏப்ரல் 26 அன்று வீசிய பலத்த காற்றுடன் கூடிய மழைனால் கீழ்அரசம்பட்டு கிராமத்தில் பயிரிப்பட்ட செவ்வாழை உட்பட 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் காற்றில் சாய்ந்தது. ஏற்கனவே, ஊரடங்கு உத்தரவு காராணமாக பாதிப்புக்குள்ளாகியுள்ள விவசாயிகளை காற்றால் வாழை மரங்கள் சாய்ந்து மிகவும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது. படம்: வி.எம்.மணிநாதன்.

85 / 86
86 / 86

Recently Added

More From This Category

x