Published on : 23 Apr 2020 21:09 pm

இன்றைய ( 23.04.2020) புகைப்பட செய்திகள்

Published on : 23 Apr 2020 21:09 pm

1 / 46

உலகமெங்கும் கரோனா அச்சம் நிலவும் தருணத்தில் நகரை தூய்மையாக வைக்க உதவும் துப்புரவு பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், கோவை பொது மக்கள் அவர்களுக்கு பாதபூஜை செய்தும் அத்தியாவசிய பொருட்களை வழங்கியும் நன்றியை தெரிவித்தனர். இடம்: தெப்பக்குளம் வீதி, பூமார்கட். படம்: மனோகரன்

2 / 46
3 / 46
4 / 46

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட சஷ்டி மண்டபத்தில் ஆதரவற்றோருக்கும் மற்றும் முதியோர்களுக்கும் உணவு வழங்கினார் அமைச்சர் ஆர் பி உதயகுமார் உடன் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்! படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி

5 / 46
6 / 46

மதுரை அலங்காநல்லூர் செல்லும் வழியில் அதலைக் கிராமத்தில் இரண்டாவது போகம்காண கிணற்றில் நீர் பாசன நெல் நடவு நடைபெற்றது இதில் களை எடுக்கும் பணி நடைபெறுகிறது. படம் எஸ் கிருஷ்ணமூர்த்தி

7 / 46
8 / 46

அரசரடியில் உள்ள நீரூற்று நேரத்தில் மாநகராட்சி துப்புரவு பணியாளருக்கு சால்வை அணிவித்து மாலை போட்டு வீட்டு உபயோகத்துக்கான மளிகை பொருட்களை இலவசமாக வழங்கினார் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு . உடன் மாவட்ட ஆட்சியர் இணை மற்றும் மதுரை மாநகராட்சி ஆணையாளர் விசாகன். படம் எஸ் கிருஷ்ணமூர்த்தி

9 / 46
10 / 46

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் திருக்கல்யாணத்திற்கு முன்பாகவே கிழக்கு பகுதி அம்மன் சன்னதி அர்த்த மண்டபத்தின் முன்பு மதுரை மாநகராட்சி பணியாளர்கள் கிருமி நாசினி அடித்தார்கள்! படம் எஸ் கிருஷ்ணமூர்த்தி

11 / 46
12 / 46
13 / 46

"கரோனாவை எதிர்த்து அறிவுபூர்வமாய் போராடும் மாணவர்கள்" தற்போது காவலர்கள் முகக் கவசம் அணிந்தபடி காட்சியளிக்கிறார்கள். அதை தமிழகத்தில் முதன்முதலில் உருவாக்கியவர்கள் யார் தெரியுமா? நமது சென்னை சின்மயா நகரை சேர்ந்த விஐடி கல்லூரியில் பயிலும் இளைஞர்கள்தான். கரோனாவிற்கு எதிராக.. நாம் படித்தது அதன் மூலமாக என்ன செய்யலாம் என்று யோசித்த ஹரி பிரசாத், நவநீதன் குழு எளிய முறையில் முகக் கவசம் தயார் செய்யலாமே என்ற எண்ணம் உதித்தது. உடனடியாக உடன் பயிலும் மற்றும் சக நண்பர்களுடன் 3டி பிரிண்டர் மூலமாக முகக் கவசம் செய்யும் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். முடிவில் எளிமையாக 35 ரூபாய் செலவில் தயார் செய்து வெற்றி கண்டனர். இதனை தமிழக காவல்துறை மற்றும் மருத்துவமனைகளுக்கு வழங்கி வருகின்றனர். இதனால் தனக்கு ஒரு லாபமும் இல்லை. எங்களால் முடிந்த உதவி என்று பெருமிதமாய் கூறுகின்றனர் இந்த இளைஞர்கள். இந்த முக கவசத்தை நண்பர்கள் அனைவருமாக சேர்ந்து இரவு பகலாக தயாரிப்பு பணியில் ஈடுபடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஒரு மாத காலத்தில் 30000 முக கவசங்களை தயார் செய்ததுடன் இந்தியா முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கும் சப்ளை செய்துள்ளனர். இதுபோல் ஆக்கபூர்வமான பணியில் ஈடுபடும் இளைஞர்களை பாராட்டலாமே. படம்: தகவல்: எம்.முத்து கணேஷ்

14 / 46
15 / 46
16 / 46
17 / 46

குருத்தூ பூச்சி தாக்குதல் மற்றும் புகையான் என்ற நோய் தாக்குதலால் சேதமடைந்த நெற்பயிர்களை மருந்து தெளிக்கும் விவசாயி சுப்பிரமணியம். இந்த பகுதியில் இந்த நோய் தாக்குதலால் இரண்டரை ஏக்கர் நிலம் சேதமடைந்துள்ளது. இடம்: அரியநாயகிபுரம் - படம் . மு . லெட்சுமி அருண்

18 / 46
19 / 46

கரோனா ஊரடங்கு உத்தரவினால் பல கடைகள் அடைந்துள்ளன . அதில் செய்தித்தாள் விற்பனை கடைகளும் அடங்கும் . பலர் செய்தித்தாள் கிடைக்காமல் அலைந்து திரிவதால் இந்த கரோனா ஊரடங்கு உத்தரவு காலத்தில் மட்டும் திருநெல்வேலி டவுன் திரிபுரசுந்தரி அம்மன் கோவில் அருகே செய்தித்தாள்கள் விற்கிறேன் என்று சிரித்த முகத்துடன் கூறும் பன்முக தொழிலாளர் சொக்கலிங்கம் . படம்: மு . லெட்சுமி அருண்

20 / 46

கரோனா நோய் கிருமி உடலில் பரவி உள்ளதா என முதல்வர் நாராயணசாமி (RT.PCR ) ஆர்டி.பிசிஆர் ,பரிசோதனை செய்யும் மருத்துவக்குழுவினர். இடம். சட்டபேரவை வளாகம், புதுச்சேரி படம்: .எம்.சாம்ராஜ்

21 / 46

கரோனா நோய் கிருமி உடலில் பரவி உள்ளதா என சபாநாயகர் சிவக்கொழுந்துவிற்கு (RT.PCR)ஆர்டி.பிசிஆர், பரிசோதனை செய்யும் மருத்துவக் குழுவினர். இடம். சட்டபேரவை வளாகம், புதுச்சேரி படம்: எம்.சாம்ராஜ்

22 / 46

கரோனா நோய் கிருமி உடலில் பரவி உள்ளதா என சட்டமன்ற உறுப்பினர் சங்கருக்கு (RT.PCR ) ஆர்டி.பிசிஆர் , பரிசோதனை செய்யும் மருத்துவக் குழுவினர். இடம். சட்டபேரவை வளாகம், புதுச்சேரி படம்: .எம்.சாம்ராஜ்

23 / 46

கரோனா நோய் கிருமி உடலில் பரவி உள்ளதா என சட்டமன்ற உறுப்பினர் சுவாமிநாதனுக்கு (RT.PCR ) ஆர்டி.பிசிஆர் ,பரிசோதனை செய்யும் மருத்துவக் குழுவினர்.இடம். சட்டபேரவை வளாகம், புதுச்சேரி. படம்: .எம்.சாம்ராஜ்

24 / 46

ஆர்டி.பிசிஆர் (RT.PCR),பரிசோதனைக்கு பின் வாயில் இருந்து எடுக்கப்பட்ட உமில் நீர் மாதிரியை சோதனை கூடத்திற்கு எடுத்து வைக்கும் மருத்துவக் குழுவினர். படம்: .எம்.சாம்ராஜ்

25 / 46

முக கவசம் இல்லாமல் வெளியே சென்றால் அபராதம் விதிக்க புதுச்சேரி அரசு கடும் உத்தரவை பிறப்பித்துள்ளது. இதையடுத்து முக கவசம் இல்லாமல் கடைக்கு வந்தவரிடம் ரூபாய் 100 அபராதம் விதித்து வசுலிக்கும் நகராட்சி ஊழியர்.

26 / 46
27 / 46

கீரை வாங்லையா அம்மா என்று வீட்டு வாசலுக்கு வந்து சத்துள்ள கீரையை தினம் விற்கும் விவசாயிகள் நிலை தற்போது மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது. விலைந்த கீரை அறுக்க ஆள் இல்லை அப்படியே கஷ்டப்பட்டு அறுத்தாலும் அதை கொண்டு சென்று விற்பதில் ஏகப்பட்ட சிரமம் உள்ளது. அதற்கு பயந்து விளைந்த கீரையை தோட்டத்திலேயே விட்டுவிட்டு நடப்பது நடக்கட்டும் சிவன் விட்ட வழி எனறு இருந்தபோது தோட்டத்திலேயே கீரையை விற்பது என முடிவு செய்து 10 ரூபாய்க்கு 3 கட்டுகள் என் அருகில் உள்ள கிராமங்களுக்கு தெரிவித்து களத்தில் இறங்கினர். தற்போது நாள் ஒன்றுக்கு சுமார் 200 கட்டு கீரை வரை விற்பனை ஆகிறது என்று உற்சாகத்துடன் கூறுகின்றனர்! படம் தகவல் க.ஸ்ரீபரத்

28 / 46
29 / 46

சென்னையில் விழிப்புணர்வை ஏற்படுத்த கரோனா ஆட்டோ அறிமுகப்படுத்தப்பட்டது. கரோனா கிருமி போலவே ஆட்டோவை தயார் செய்து இதில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் சென்று ஊரடங்கை மீறுபவர்களையும் மாஸ்க் அணியாமல் வருபவர்களையும் எச்சரித்து மாஸ்க் வழங்குவதோடு அபராதமும் விதிப்பர். சாலையில் இந்த ஆட்டோ வலம் வரும்போது சற்று வித்தியாசமாகவும் திகிலாகவும் இருந்தது! படங்கள்: எம்.முத்து கணேஷ்

30 / 46
31 / 46

சென்னையில் ஊரடங்கு உத்தரவை பற்றி கவலைப்படாமல் சாலையில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து செல்கின்றன. சாதாரண நாட்களிலேயே போக்குவரத்து இலகுவாக இருக்கும் ஆலந்தூர் பகுதியிலேயே வாகனங்கள் அடைத்தவாறு சென்றனர். போலீசார் கேட்டால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு முக்கிய காரணங்களை சொல்கின்றனர். படத்தைப் பார்த்தால் ஒரு ஊரடங்கு போலவா தோன்றுகிறது.. இதேபோல நங்கநல்லூர் மார்க்கெட் பகுதியில் ஏதாவது ஒரு காய் வாங்குகிறேன் பேர்வழி என்று கூட்டம் கூட்டமாக திரிகின்றனர். படங்கள் எம்.முத்து கணேஷ்

32 / 46
33 / 46
34 / 46
35 / 46

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வேலை பார்க்கும் ஊழியர் மற்றும் உறவினர்களுக்கு தொற்றுநோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து கோவில் ஊழியர்கள் மற்றும் சிவாச்சாரியார்கள் அனைவருக்கும் மொபைல் கிளினிக் யூனிட் மூலம் பரிசோதனை செய்யப்படுகிறது! படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

36 / 46
37 / 46

காட்பாடி ஆக்ஸிலியம் கல்லூரி ரவுண்டானா பகுதியில் காவல்துறை சார்பில் கரோனாவை ஒழிப்போம்! தனித்திரு! விலகியிரு!! வீட்டிலிரு!!! என்ற வாசகத்துடன் வரையப்பட்டுள்ள கரோனா வைரஸ் விழிப்புணர்வு ஓவியம். படம்: வி.எம்.மணிநாதன்.

38 / 46
39 / 46
40 / 46

கரோனா வைரஸ் தொற்று காரணமாக, வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்தவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி நாசினி மருத்து தெளித்த தீயணைப்பு வீரர். படம்: வி.எம்.மணிநாதன்

41 / 46
42 / 46

வேலூரில் கரோனா தொற்று பாதித்து தனிமைப்படுத்தப்பட்ட கொணவட்டம் பகுதியில் டிரேன் கேமிரா மூலம் கண்காணித்த காவல்துறையினர். படம்: வி.எம்.மணிநாதன்.

43 / 46
44 / 46

ஊரடங்கு உத்தரவு காரணமாக வாகன போக்குவரத்து குறைந்து காணப்படும் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அனல் காற்றுடன் சுட்டெரிக்கும் வெயிலில் தென்பட்ட கானல்நீர். இடம். வேலூர் அடுத்த கருகம்பத்தூர். படம்: வி.எம்.மணிநாதன்.

45 / 46
46 / 46

கரோனா வைரஸ் தொற்று உள்ளதா என வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் காவல் துறையினருக்கு பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது. படம்: வி.எம்.மணிநாதன்

Recently Added

More From This Category

x