Published on : 21 Apr 2020 19:57 pm

இன்றைய (21.04.2020) புகைப்பட செய்திகள்

Published on : 21 Apr 2020 19:57 pm

1 / 22

கோவை காந்திபுரம் சந்திப்பு அருகே, காட்டூர் போலீஸார் கரோனா வைரஸ் குறித்த வேடம் அணிந்த நபருடன், கரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இன்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். படம் : ஜெ.மனோகரன்

2 / 22
3 / 22

கன்று ஈனமுடியாமல் கஷ்டப்பட்ட பசுவிற்கு அரசு மருத்துவர் மற்றும் தன்னார்வலர்களால் பிரசவம் பார்க்கப்பட்டது . படம்: லஷ்மி அருண்

4 / 22
5 / 22
6 / 22

கோடை வெப்பத்தை தணிக்கும் மருத்துவ குணம் நிறைந்த வெள்ளரிப் பழம் சேலம் மாட்டத்தில் விவசாயிகள் அதிக அளவில் சாகுபடி செய்துள்ளனர். தற்போது, அறுவடை தொடங்கிய நிலையில், ஊரடங்கு உத்தரவு காரணமாக சந்தைப்படுத்துவதில் சிறு விவசாயிகள் சிரமங்களை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இச்சிரமத்தை போக்க வேளாண் வணிகத்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சேலம் மூக்கனேரி பகுதியில் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள வெள்ளரிப்பழத்தை வேதனையுடன் பார்க்கும் விவசாயி. படங்கள் எஸ்.குரு பிரசாத்

7 / 22
8 / 22
9 / 22

சென்னையை அடுத்த மதுராந்தகம் பகுதி மாம்பாக்கத்தில் விளைந்த நெல் மணிகள் இவை.. 2000 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட 500 ஏக்கர் அளவில் அறுவடை செய்யப்பட்டு கொள்முதல் செய்யப்படாமல் சாலையோரங்களிலும் ஏரிகளின் கலங்கள் பகுதிகளிலும் குவித்து வைக்கப்பட்டுள்ளன. கொள்முதல் செய்ய அதிகாரிகளின் வருகையை எதிர்நோக்கி காத்திருக்கும் விவசாயிகள். மீதமுள்ள 1500 ஏக்கர் நிலத்தில் அறுவடைக்கு உரிய பக்குவத்தில் காத்திருக்கும் நெற்கதிர்களை காட்டும் விவசாயிகள். அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்கவில்லை எனில் டன் கணக்கில் நெற்பயிர்கள் நாசமானது உறுதி என்று விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். படம்: தகவல்கள்: எம் முத்துகணேஷ்

10 / 22
11 / 22

கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் பெருகி வருகிறது இதனால் மக்களிடையே பெரும் அச்சத்தை கொரோனா தொற்று நோய் பாதிப்பையும் ஏற்படுத்தி வருகிறது ஊரடங்கினால் மக்கள் வீட்டிலேயே மூடங்கி கிடக்கும் சுழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர் பொது இடங்கள் சாலைகள் ஏன அனைத்து பகுதிகளும் வெறிச்சோடி காணப்பட்டாலும் நாளுக்கு நாள் வீடுகளிலிருந்து வீதிக்கு வரும் குப்பை அளவை குறைக்க முடியாது இரவும் பகலும் சாலைகளை சுத்தம் செய்து நம்மை சுகாதாரமாக வைக்கும் துாப்புறவு பணியாளர்களை இலவச பாத அழுத்த சிகிச்சை செய்யும் பொது நல அமைப்பினர். படங்கள்.எம்.சாம்ராஜ்

12 / 22
13 / 22

கழிவு நீரை சாலையோரம் உள்ள கால்வாயில் விடப்படுகிறது ! இடம்: பெரியார் E.V.R. சாலை. மதுரவாயல் - படம்: பி.கே.பிரவீன்

14 / 22
15 / 22
16 / 22

கரோனா Rapid பரிசோதனை செய்யப்பட்டது: இடம்: மண்ணடி: படம்: பி.கே.பிரவீன்

17 / 22
18 / 22
19 / 22

கரோனா வைரஸ் தொற்று காரணமாக, வேலூரில் ஆங்காங்கே சாலை ஓரங்களில் விற்பனைக்கு தொங்க விடப்பட்டுள்ள வண்ண காட்டன் துணியினால் தைக்கப்பட்ட முக கவசங்கள். படம்: வி.எம்.மணிநாதன்.

20 / 22
21 / 22

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த 15 நபர்கள், திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 5 நபர்கள் பரிசோதனை முடிவில் பரிபூரண குணம் அடைந்தனர். இவர்கள் தங்கள் வீடுகளுக்கு செல்லும் முன்பு தன்னலம் பாராமல் ஓய்வின்றி தங்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், செவிலியர்களுக்கு கைத்தட்டி கரவொலி எழுப்பி கண்ணீர் விட்டு பிரார்த்தனை செய்தனர். படம்: வி.எம்.மணிநாதன்.

22 / 22

Recently Added

More From This Category