Published on : 03 Dec 2022 15:07 pm

இந்திய கடற்படை சாகச நிகழ்வு - மக்கள் வியக்கவைத்த ஒத்திகை காட்சிகள்

Published on : 03 Dec 2022 15:07 pm

1 / 30

இந்திய கடற்படை தினத்தை முன்னிட்டு விசாகப்பட்டினத்தில் செயல்பாடுகள் குறித்த விளக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையொட்டிய ஒத்திகை நிகழ்ச்சியை விசாகப்பட்டினத்தில் மக்கள் கண்டு வியந்தனர். | படங்கள்: வி. ராஜூ

2 / 30

1971-ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரின் போது இந்திய கடற்படை ஆற்றிய சிறந்த பங்கை அங்கீகரிப்பதற்காகவும், 'ஆபரேஷன் ட்ரைடென்ட்' போர் நடவடிக்கையின் சாதனைகளை நினைவுகூரவும், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4-ஆம் தேதியை கடற்படை தினமாக இந்தியா கொண்டாடுகிறது.

3 / 30

இந்த ஆண்டு, நாடு தனது சுதந்திரத்தின் 75-வது ஆண்டைக் கொண்டாடும் நிலையில், இந்திய கடற்படை, இந்தியாவின் போர் வீரம் மற்றும் போர்த் திறனை விசாகப்பட்டினத்தில் டிசம்பர் 4 2022 ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் 'செயல்பாட்டு விளக்கம்' நிகழ்ச்சி மூலம் வெளிப்படுத்த உள்ளது.

4 / 30

குடியரசுத் தலைவரும் முப்படைகளின் தலைவருமான திரவுபதி முர்மு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சியைக் காணவுள்ளார்.

5 / 30

கடற்படை தலைமைத் தளபதி அட்மிரல் ஆர் ஹரி குமார் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், மத்திய மற்றும் மாநில அரசுகளைச் சேர்ந்த பல உயரதிகாரிகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

6 / 30

பாரம்பரியமாக, குடியரசுத் தலைவர் மற்றும் பிற உயரதிகாரிகள் முன்னிலையில் புதுதில்லியில் கடற்படை தினக் கொண்டாட்டங்கள் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு, முதல் முறையாக, தலைநகருக்கு வெளியே கடற்படை தின கொண்டாட்டங்கள் நடத்தப்படுகின்றன.

7 / 30

இந்திய கடற்படைக் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், விமானங்கள் மற்றும் கிழக்கு, மேற்கு மற்றும் தென் மண்டலக் கடற்படைப பிரிவுகளின் சிறப்புப் படைகள் கடற்படையின் திறனையும், பல்துறைத்திறனையும் வெளிப்படுத்தவுள்ளன. இந்நிகழ்ச்சி சூரிய அஸ்தமனத்தின்போது, இந்த விழா கப்பல்களில் ஒளியேற்றுதலுடன் நிறைவடையும்.

8 / 30

கடற்படை தின கொண்டாட்டங்கள், மக்கள் மத்தியில் கடல்சார் உணர்வுக்கு புத்துயிரூட்டுதல், தேசிய பாதுகாப்பிற்கான கடற்படையின் பங்களிப்பை எடுத்துரைத்தல் போன்றவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.

9 / 30
10 / 30
11 / 30
12 / 30
13 / 30
14 / 30
15 / 30
16 / 30
17 / 30
18 / 30
19 / 30
20 / 30
21 / 30
22 / 30
23 / 30
24 / 30
25 / 30
26 / 30
27 / 30
28 / 30
29 / 30
30 / 30

Recently Added

More From This Category

x