சிதம்பரம் பாமக வேட்பாளர் மனு நிராகரிப்பு: அவரது மனைவியின் மனு ஏற்பு

சிதம்பரம் பாமக வேட்பாளர் மனு நிராகரிப்பு: அவரது மனைவியின் மனு ஏற்பு
Updated on
1 min read

சிதம்பரம் தொகுதியில் பாமக வேட்பாளராக களமிறக்கப்பட்ட தொழிலதிபர் மணிரத்னத்தின் வேட்புமனு தேர்தல் நடத்தும் அலுவலரால் நிராகரிக்கப்பட்டது. சிதம்பரம் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக சிதம்பரத்தின் ஆதரவாளர் பி.வள்ளல்பெருமான் அறிவிக்கப்பட்டார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மணிரத்னம், காங்கிரஸ் தலைமையிடம் தனது எதிர்ப்பை காட்டிய போதும், காங்கிரஸ் அசையவில்லை. இதனால் மனமுடைந்த மணிரத்னம், அதிரடியாக பாமகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

அவர் அக்கட்சியில் இணைந்த மறு நிமிடம், பாமக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். முறைப்படி அறிவிப்பு வெளியான நிலையில், சிதம்பரம் தொகுதியின் பாமக வேட்பாளரான மணிரத்னம், வியாழக்கிழமை அரியலூர் ஆட்சியர் அலுவல கத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

அதனுடன் கூடுதலாக 3 வேட்புமனுக்களையும் தாக்கல் செய்தார். மாற்று வேட்பாளராக தனது மனைவி சுதாவையும் மனு தாக்கல் செய்ய வைத்திருந்தார். திங்கள்கிழமை வேட்புமனு பரிசீலனை நடந்தது. அரியலூர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மொத்தம் 23 வேட்புமனுக்கள் தாக்கல் செய்திருந் தனர்.

இதில் 6 மனுக்கள் நிராகரிப்பட்டதாகவும், அதில் மணிரத்னத்தின் வேட்புமனுவும் அடங்கும் என அரியலூர் ஆட்சியர் சண்முகவேல்ராஜ் அறிவித் தார். மணிரத்னத்தின் மனு நிராகரிப்பட்டது குறித்து ஆட்சியரிடம் கேட்டபோது, “தேர்தல் ஆணையத் தின் அங்கீகரிக்கப்பட்ட கட்சிப் பட்டியலில் பாமகவின் பெயர் இல்லை. எனவே மணிரத்னத்தின் வேட்புமனுவும் சுயேச்சை வேட்பாளரின் மனுவைப்போன்றே கருதப்படும்.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஒருவர் முன் மொழிந்தால் போதுமானது. அதுவே சுயேச்சையாக இருப்பின் 10 பேர் முன்மொழிய வேண்டும்.அதன்படி மணிரத்னத்தின் வேட்புமனுவை 10 பேர் முன்மொழிய வேண்டும், ஆனால் அவருக்கு 4 பேர் மட்டுமே முன்மொழிந்துள்ளதால், அவரது மனு நிராகரிக்கப்பட்டது.

அதே நேரத்தில் அவரது மனைவி சுதாமணிரத்னத்தின் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது”. என்றார் சண்முக வேல்ராஜ். மணிரத்னத்தின் மனைவி சுதா, காட்டுமன்னார்கோயில் வட்டம் நாட்டார்மங்கலம் ஊராட்சியின் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in