மிசோரம் வாக்குப்பதிவு 11-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

மிசோரம் வாக்குப்பதிவு 11-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
Updated on
1 min read

வடகிழக்கு மாநிலமான மிசோரமில் நாளை நடைபெறவிருந்த வாக்குப்பதிவு 11-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இத்தகவலை மிசோரம் தலைமை தேர்தல் அதிகாரி அஸ்வனிகுமார் தெரிவித்துள்ளார்.

ப்ரூ பழங்குடியினர் திரிபுராவின் நிவாரண முகாமிலிருந்து வாக்களிக்க எதிர்ப்பு தெரிவித்து, தன்னார்வ அமைப்புகளும், மாணவர்கள் கூட்டமைப்பும் 3 நாட்கள் முழு அடைப்பு நடத்துகிறது. இதனை கருத்தில் கொண்டு வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in