குற்றப்பின்னணி வேட்பாளர்கள் பாஜகவில்தான் அதிகம்: தன்னார்வ அமைப்பு தகவல்

குற்றப்பின்னணி வேட்பாளர்கள் பாஜகவில்தான் அதிகம்: தன்னார்வ அமைப்பு தகவல்
Updated on
1 min read

பாஜக ஆட்சிக்கு வந்தால் குற்றப் பின்னணி கொண்ட மக்களவை உறுப்பினர்கள் மீது கடும் நட வடிக்கை எடுக்கப்படும் என மோடி தன் பிரச்சாரத்தின் போது தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஜனநாயக மறுசீரமைப்புக்கான சங்கம் (ஏடிஆர்) சார்பில் இது தொடர் பான புள்ளி விவரம் வெளியிடப் பட்டுள்ளது.

முதல் ஆறு கட்ட தேர்தலில் போட்டியிடும் 5,380 வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்பு மனுவில் உள்ள விவரங்களின் அடிப் படையில் இத்தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

மொத்தமுள்ள 5,380 வேட்பாளர்களில் 879 பேர் (16%) மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. 533 பேர் மீது கொலை, பாலியல் பலாத்காரம், வழிப்பறி உள்ளிட்ட தீவிர குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன

காங்கிரஸின் 287 வேட்பாளர்களில் 13 சதவீதத்தினர் அதாவது 36 வேட்பாளர்கள் மீது தீவிர குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன.

பாஜகவின் 279 வேட்பாளர் களில் 48 பேர் (17%) மீது தீவிர குற்ற வழக்குகள் பதிவாகி யுள்ளன.

ஆம் ஆத்மியின் 291 வேட் பாளர்களில் 29 பேர் (10%) மீதும், பகுஜன் சமாஜின் 318 வேட்பாளர்களில் 39 பேர் (12%) மீதும் தீவிர குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன.

காங்கிரஸின் 287 வேட்பாளர்களில் 75 பேர் (26 %); பாஜகவின் 279 வேட்பாளர்களில் 88 பேர் (32%); ஆம் ஆத்மியின் 291 வேட்பாளர்களில் 44 பேர் (15%); பகுஜன் சமாஜின் 318 வேட்பாளர்களில் 65 பேர் (20%) மீதும் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in