மத்திய அரசுக்கு தமிழகம் கட்டளையிடும் காலம் வரும்: நடிகை விந்தியா பேட்டி

மத்திய அரசுக்கு தமிழகம் கட்டளையிடும் காலம் வரும்: நடிகை விந்தியா பேட்டி
Updated on
1 min read

மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய காலம் மறைந்து, கட்டளையிடும் காலம் வரும் என்றார் நடிகை விந்தியா.

கரூர் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் தம்பிதுரையை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக கரூர் வந்த அவர் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறிய தாவது:

“மார்ச் 16-ம் தேதி தொடங்கி பிரச்சாரம் செய்து வருகிறேன். செல்லும் இடங்களில் எல்லாம் மக்களிடம் அதிமுகவுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. 2011-ம் ஆண்டில் தமிழகத்தில் மாற்றத் துக்கு காத்திருந்ததைப்போலவே தற்போதும் மத்தியில் மாற்றத் தைக் கொண்டு வர மக்கள் காத்திருக்கின்றனர். மக்களுக்கு நல்லது செய்யும் ஆட்சி மத்தியில் வர வேண்டும் என்று மக்கள் தெளிவாக உள்ளனர்.

சின்னசாமி ஒன்றும் செய்யவில்லை

தமிழக தொழில்துறை அமைச்ச ராக இருந்தபோது இந்தப் பகுதி மக்களின் தொழில் மற்றும் வேலைவாய்ப்புக்கென்று சின்ன சாமி ஒன்றும் செய்யவில்லை. ஆனால், லாலாப்பேட்டை, வெங்கமேடு மேம்பாலங்கள், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நான்குவழிச் சாலை போன்ற திட்டங்களை தம்பிதுரை கொண்டுவந்தார்.

நாட்டிலே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில் தான் மிகக் குறைவாக நடப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பக புள்ளிவிவரம் தெரிவித்துள்ளது. திமுக ஆட்சியில்தான்- மத்திய அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலு மீத்தேன் எரிவாயு ஒப்பந்தத் திட்டத்தில் கையெழுத்திட்டார்.

திமுக முட்டுக்கட்டை

தமிழகத்தின் மின் தட்டுப் பாட்டை போக்குவதற்காக குஜ ராத்திலிருந்து மின்சாரம் வாங்க முதல்வர் ஜெயலலிதா முயற் சித்தபோது, திமுக அமைச்சர்கள் பங்கேற்றிருந்த மத்திய அரசு முட்டுக்கட்டைபோட்டது. தமிழகம், புதுச்சேரி 40 இடங்களிலும் அதிமுக வெற்றி பெற்று முதல்வர் ஜெயலலிதா பிரதமராவார்” என்றார் விந்தியா.

புதுக்கோட்டை அருகே விந்தியா மீது கல்வீச்சு…

கரூர் மக்களவைத் தொகு திக்குள்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் சோதனைச்சாவடி அருகே அதிமுக வேட்பாளர் மு.தம்பிதுரையை ஆதரித்து நடிகை விந்தியா மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் திறந்த வேனில் திங்கள்கிழமை இரவு பிரச்சாரம் மேற்கொண்டனர். அப்போது, நடிகை விந்தியா, திமுக தலைவர் கருணாநிதியை விமர்சித்து பேசிக் கொண்டிருந்தாராம். அப்போது, கூட்டத்தில் இருந்து மர்மநபர் வீசிய கல் பிரச்சார வேனில் விந்தியா முன்பு விழுந்துள்ளது. இதனால் யாருக்கும் பாதிப்பு இல்லை.

இது குறித்து அங்கு நின்று கொண்டிருந்த அமைச்சரின் தனி பாதுகாப்பு அலுவலர், அரசுக்கு தகவல் தெரிவித்ததாக, அமைச் சருக்கு தலைமையிடமிருந்து தகவல் வந்ததாம்.

தனக்கு தெரியாமல் தகவலை தலைமைக்கு சொன்னதால் தனி பாதுகாப்பு அலுவலரை அமைச்சர் கடிந்துகொண்டதாக அக்கட்சியினர் கூறுகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in