

இந்தியா விடுதலைக்கு பின் 1951-ல் துவங்கிய தேர்தல் ஓராண்டு வரை நடந்தது. அப்போது மதுரை நகரில் மதுரை வடக்கு, மதுரை தெற்கு ஆகிய 2 தொகுதிகள் மட்டுமே இருந்தன. மதுரை வைகை ஆற்றின் வடகரை பகுதி வடக்கு தொகுதியாக உருவானது. 1957-ம் ஆண்டு வரை மட்டுமே இருந்த தொகுதியின் பெயர் பின்னர் நீக்கப்பட்டு கிழக்கு, மேற்கு தொகுதிகள் உருவாயின. தற்போது மீண்டும் 2011-ம் ஆண்டு தொகுதி சீரமைப்பின்படி 45 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் மதுரை வடக்கு தொகுதி உருவானது.
2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்
மதுரை மேற்கு தொகுதியில் இடம் பெற்றிருந்த பல பகுதிகள் இத்தொகுதிக்கு மாற்றப்பட்டன. மதுரை தெற்கு தாலுகாவில் சில பகுதிகளும், வடக்கு தாலுகாவில் சில பகுதிகளும், மாநகராட்சியில் உள்ள 16 வார்டுகள் தொகுதியில் இடம் பெற்றுள்ளன. செல்லூர், கோரிப்பாளையம், பீ.பீ.குளம், தல்லாகுளம், கே.கே.நகர், அண்ணாநகர், கோமதிபுரம், மேலமடை, ரிசர்வ் லைன், உள்ளிட்ட முக்கிய பகுதிகள் இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளன. மாவட்ட ஆட்சியர் அலுவலகம், உலக தமிழ்ச்சங்கம், அரசு சட்டக்கல்லூரி, மாவட்ட நீதிமன்றம், அரசு தொழிற்பயிற்சி நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்கள் இத்தொகுதியில் அடங்கியுள்ளன.
அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள், வணிகர்கள், தொழிலதிபர்கள் பரவலாக வசிக்கின்றனர். வண்டியூர் கண்மாய், செல்லூர் கண்மாய் தூர்வாரப்படாதது, கோரிப்பாளையம் வாகன நெரிசல், கே.கே.நகர், கோமதிபுரம் பகுதிகளில் நிலத்தடி நீர் பிரச்சனை, செல்லூர் கண்மாய் வெள்ளத்துக்கு நிரந்தர தீர்வு இல்லாதது, சுகாதாரமற்ற பந்தல்குடி கால்வாய், அரசு குடியிருப்புகள் பராமரிக்கப்படாதது உள்ளிட்ட பல பிரச்சனைகள் நீண்ட காலமாக உள்ளன.
1951-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பி.ராமமூர்த்தி(கம்யூனிஸ்ட்) வென்றார். கடந்த 2011-ம் ஆண்டு தேர்தலில் ஏ.கே.போஸ்(அதிமுக) வெற்றி பெற்றார்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
மதுரை (மாநகராட்சி) வார்டு எண். 2 முதல் 8 வரை 11 முதல் 15 வரை மற்றும் 17 முதல் 20 வரை.
மதுரை வடக்கு தாலுகா (பகுதி) மேலமடை (சென்சஸ் டவுன்)
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் | 1,14.012 |
பெண் | 1,18,730 |
மூன்றாம் பாலினத்தவர் | 23 |
மொத்த வாக்காளர்கள் | 2,32,765 |
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | போஸ்.A.K | அதிமுக | 90706 |
2 | ராஜேந்திரன்.K.S.K | காங்கிரஸ் | 44306 |
3 | குமாரலிங்கம்.M | பாஜக | 3505 |
4 | செந்தில்குமார்.S | இந்திய ஜனநாயக கட்சி | 1148 |
5 | ஜெயச்சந்திரன்.S | சுயேச்சை | 780 |
6 | சந்திரசேகரன்.S | சுயேச்சை | 755 |
7 | மீனாட்சி சுந்தரம்.M | சுயேச்சை | 498 |
8 | பாலுசாமி.K | சுயேச்சை | 390 |
9 | முத்துசாமி.P | சுயேச்சை | 308 |
10 | பழநிகணேஷ்.S.K | சுயேச்சை | 175 |
142571 |