15 - திரு.வி.க நகர்

15 - திரு.வி.க நகர்
Updated on
2 min read

தமிழுக்கும் தமிழ் எழுத்தாளர் குலத்துக்கும் தந்தையாகவும், தொழிலாளர்களுக்கு தாயாகவும் விளங்கிய திரு.வி.கல்யாணசுந்தரனார் பெயரில் இத்தொகுதி அமைந்துள்ளது.

தொழிற்சங்கத்தைத் தோற்றுவித்து தொழிலாளர்களின் உரிமைக்கும், முன்னேற்றத்துக்கும் பாடுபட்ட திரு.வி.க., அரசியல், சமுதாயம், சமயம் என பல துறைகளிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். பல நூல்களையும் எழுதினார்.

அவரது பெயரில் அமைந்துள்ள இத்தொகுதியில், பெரம்பூர் ரயில் நிலையம், பஸ் நிலையம், ஓட்டேரி, நம்மாழ்வார்பேட்டை, மங்களபுரம், பட்டாளம், புளியந்தோப்பு, ஜமாலியா, கன்னிகாபுரம், தாசமக்கான், கணேசபுரம் உள்ளிட்ட பகுதிகள் இடம்பெற்றுள்ளன.

2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்

சென்னையில் 3 இடத்தில் (சைதாப்பேட்டை, வில்விவாக்கம், புளியந்தோப்பு) இறைச்சிக்கூடங்கள் உள்ளன. இதில் மிகப்பெரியது புளியந்தோப்பு இறைச்சிக்கூடம்தான் (ஆடுதொட்டி). இதை நவீனப்படுத்தும் பணி இன்னமும் முடிந்தபாடில்லை. அதனால் ஆயிரக்கணக்கான ஆடுகள் வெட்டப்படும் இங்கே சுகாதாரக் கேடுக்கு பஞ்சமில்லை என்று மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

பிரபலமான பி அண்ட் சி மில் (தற்போது பயன்பாட்டில் இல்லை), அமைந்துள்ள பகுதியில் ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்குதான் “சென்னை தொழிலாளர் சங்கம்” என்ற பெயரில் இந்தியாவிலே முதல் தொழிற்சங்கம் உருவானதாக இப்பகுதி மக்கள் பெருமையாகக் கூறுகின்றனர்.

இத்தொகுதியில் திரு.வி.கல்யாணசுந்தரனார், ரெட்டமலை சீனிவாசன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்ந்தது குறிப்பிடத்தக்கது. முஸ்லீம்கள், தாழ்த்தப்பட்டோர் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர்.

ஓட்டேரி பகுதியில் அப்பளம் தயாரிப்பு, பீடி சுற்றுதல், எவர்சில்வர், அலுமினியம் பட்டறை, மர வேலைகள் போன்ற சிறு தொழில்கள் நிறைய உள்ளன. பாக்ஸிங், கால்பந்து, தடகள வீரர்கள் இத்தொகுதியில் அதிகம்.

ஓட்டேரி நல்லா கால்வாயையொட்டி ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசிக்கின்றன.

இக்கால்வாயை தூர்வாரி, கரையைப் பலப்படுத்த வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கை நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. அதனால், கொசுத்தொல்லை, தொற்றுநோய், காலரா, டெங்கு பாதிப்பும் அதிகம் என்கின்றனர் இப்பகுதி மக்கள்.

சற்று அதிகமாக மழை பெய்தால்கூட ஜமாலியா, மேட்டுப்பாளையம், பட்டாளம், ஓட்டேரி ஆகிய பகுதிகள் தீவுபோல் ஆகிவிடுகின்றன. ஓட்டேரி நல்லா கால்வாயை தூர்வாராததே இந்நிலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

அருந்ததியர் மக்களுக்கான செருப்பு தைக்கும்கூடம், குடியிருப்புகள் அமைந்துள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. செருப்பு தைக்கும்போது குப்பைபோல சேரும் தோல் கழிவுகளை அப்புறப்படுத்துவதற்கான வழிமுறை இல்லாததால் ஆங்காங்கே கொட்டி தீவைத்து எரிக்கப்படுகிறது.

சுதந்திரப் போராட்ட வீரர் செல்வதி செட்டியார் நினைவாக 1942-ல் மாநகராட்சிக்கு சொந்தமான பட்டாளம் மணிக்கூண்டு பூங்கா உருவாக்கப்பட்டது. இதன் அருகே கட்டப்படவுள்ள தனியார் குடியிருப்பு பாதைக்காக இந்த பழமையான பூங்காவை இடித்துவிட்டதாக இப்பகுதி மக்கள் ஆதங்கப்படுகின்றனர். இந்த பூங்காவில் பேசாத தலைவர்களே இல்லை என்று சொல்லலாம். அந்தளவுக்கு இப்பூங்கா பிரபலமானது.

29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,04,606

பெண்

1,10,269

மூன்றாம் பாலினத்தவர்

35

மொத்த வாக்காளர்கள்

2,14,910

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

2011தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

நீலகண்டன்

அதிமுக

72887

2

நடேசன் .DR

காங்கிரஸ்

43546

3

கருணாநிதி .இ

பிஜேபி

3561

4

அஜிதா

ஐ ஜே கே

756

5

சக்திவேல்

பி எஸ் பி

630

6

ஷீலா பாஸ்கரன்

சுயேச்சை

518

7

சிலம்பரசன்

சுயேச்சை

407

8

சிவகுமார்

சுயேச்சை

272

9

பிரபாகரன்

சுயேச்சை

235

10

கொளஞ்சி

சுயேச்சை

231

11

செல்வகுமார்

சுயேச்சை

212

12

ரேணுகுமார்

எல் ஜே பி

151

13

கலைவண்ணன்

சுயேச்சை

124

14

சங்கர்

சுயேச்சை

106

15

கோபாலகிருஷ்ணன்

சுயேச்சை

100

16

கோவிந்தராஜு

சுயேச்சை

71

123807

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in