169 - நன்னிலம்

169 - நன்னிலம்
Updated on
1 min read

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலம் சட்டமன்ற தொகுதி 1952 ம் ஆண்டு மற்றும் 1957 ம் ஆண்டு தேர்தலில் இரட்டைத் தொகுதியாக இருந்தது. இந்த தொகுதி தனித்தொகுதியாக இருந்தது. 48 ஆண்டுகளுக்கு பிறது தொகுதி மறு சீரமைப்பின் போது பொது தொகுதியாக மாற்றப்பட்டது.

தொகுதி மறுசீரமைப்பின் போது இம்மாவட்டத்தில் இருந்த வலங்கைமான் தொகுதி நீக்கப்பட்டு, அதற்குட்பட்ட பகுதிகள் எல்லாம் நன்னிலம் சட்டமன்றத் தொகுதியில் சேர்க்கப்பட்டது.

தொகுதி மறுசீரமைப்பில் நீக்கப்பட்ட வலங்கைமான ஒன்றியத்தில் உள்ள 61 கிராமங்கள் இத்தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த தொகுதி முழுக்க முழுக்க கிராமப்புறங்களை உள்ளடக்கிய தொகுதியாகும். நன்னிலம் பகுதியில் விவசாயம் தான் பிரதான தொழில். இங்கு விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் தான் அதிகம்.

இந்த தொகுதியில் புகழ்பெர்ற ஷ்ரீவாஞ்சியம் எமதர்மராஜா கோயில், கூத்தனூர் சரஸ்வதி கோயில்கள் புகழ்பெற்று விளங்குகிறது. மேலும் நவக்கிரகத் தலங்களில் ஒன்றான ஆலங்குடி குருபகவானும், ராகு- கேது தலமாக விளங்கும் திருப்பாப்புரமும் இந்த தொகுதியில் அமைந்துள்ளது.

2011 ஆர்.காமராஜ் (அதிமுக) 91,959 வெற்றி தமிழக உணவு மற்றும் அறநிலையத்துறை அமைச்சராக உள்ளார்.

இந்த தொகுதியில் காங்கிரஸ், திமுக தலா நான்கு முறையும், அதிமுக மூன்று முறையும், தமாகா, இந்திய குடியரசு கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது.

2016 தேர்தலில் கலம் காணும் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

ஆர். காமராஜ்

அதிமுக

2

எஸ்எம்பி. துரைவேலன்

காங்கிரஸ்

3

ஞா.சுந்தரமூர்த்தி

மார்க்சிஸ்ட்

4

இ.இளவரசன்

பாமக

5

ஆர்.சரவணன்

ஐஜேகே

6

செ.அன்புசெல்வம்

நாம் தமிழர்

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

நன்னிலம் தாலுகா

வலங்கைமான் தாலுகா

குடவாசல் தாலுக்கா (பகுதி)

பரவாக்கரை,வயலூர், வடமட்டம், அன்னியூர், செருகுடி, திருப்பாம்பரம், சுரைக்காயூர், ஆலாத்தூர், கிள்ளியூர், வடுகக்குடி, விளாகம், திருவிழிமிழலை, வெள்ளை அதம்பர், தேத்தியூர், மணவாளநல்லூர், மருத்துவக்குடி, கூந்தலூர், புதுக்குடி, கண்டிரமாணிக்கம், பிரதாபராமபுரம், மேலராமன்சேத்தி, சீத்தக்காமங்கலம், சேத்தினிபுரம், விக்கிரபாண்டியம், புளியஞ்சேரி, பருத்தியூர், சித்தாடி, அடிப்பூலியூர், செருகளத்தூர், வடவேர், திருவிடைச்சேரி, நாரணமங்கலம், நெடுஞ்சேரி, நெய்குப்பை, செம்மங்குடி, பெரும்பன்னையூர், சேங்காளிபுரம், பெருமங்கலம், அன்னவாசல், மணப்பரவை, ஆளடிகருப்பூர், மேலபளையூர், திருக்குடி, மஞ்சக்குடி, புதுக்குடி மற்றும் சிமிலி கிராமங்கள்.

29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,28,564

பெண்

1,24,832

மூன்றாம் பாலினத்தவர்

1

மொத்த வாக்காளர்கள்

2,53,397

தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1977 - 2011 )

ஆண்டு

வெற்றிபெற்றவர்

கட்சி

2011

காமராஜ்.k

அதிமுக

2006

பத்மாவதி

இ.கம்யூ

2001

C.K.தமிழரசன்

தமாகா

1996

பத்மா

தமாகா

1991

K.கோபால்

அதிமுக

1989

M.மணிமாறன்

திமுக

1984

M.மணிமாறன்

திமுக

1980

A.கலையரசன்

அதிமுக

1977

M.மணிமாறன்

திமுக

2006 தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

P. பத்மாவதி

சி.பி.ஐ

65614

2

K. அறிவானந்தம்

அ.தி.மு.க

54048

3

R. ராஜேந்திரன்

தே.மு.தி.க

4989

4

S. ராஜேந்திரன்

சுயேச்சை

1483

5

R. சூரியமூர்த்தி

பாஜக

1377

127511

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

R. காமராஜ்

அ.தி.மு.க

92071

2

R. இளங்கோவன்

தி.மு.க

81667

3

G. கணேசன்

ஐஜேகே

2835

4

T. இமானுவேல்

பகுஜன் சமாஜ் கட்சி

1247

5

K.N. பனசைரங்கன்

சுயேச்சை

1211

6

A. சேகர்

சுயேச்சை

647

7

G. சுப்ரமணியன்

சுயேச்சை

587

8

V. சிவகுமார்

சுயேச்சை

419

180684

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in