9 - மாதவரம்

9 - மாதவரம்
Updated on
2 min read

மறுசீரமைப்புக்குப் பிறகு திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 2011-ம் ஆண்டு தேர்தலின் போது உருவாக்கப்பட்ட சட்டப்பேரவை தொகுதிகளில் ஒன்று, மாதவரம். இத்தொகுதி, மாதவரம் வட்டம் மற்றும் ஆவடி, பொன்னேரி, திருவொற்றியூர் வட்டப்பகுதிகளடங்கியது.

இதில், மாதவரம் வட்டத்தில் உள்ள பெரும்பகுதிகள் மற்றும் திருவொற்றியூர் வட்டப்பகுதிகள் சென்னை மாநகராட்சி பகுதிகளாக விளங்குகின்றன.

மாதவரம் தொகுதி, நாரவாரிக்குப்பம்(செங்குன்றம்) பேரூராட்சி மற்றும் சென்னைக்கு குடிநீர் தரும் முக்கிய ஏரிகளான புழல் ஏரி, சோழவரம் ஏரி, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், புழல் மத்திய சிறைச்சாலை, மாதவரம் பால்பண்ணை உள்ளிட்டவைகளை தன்னகத்தே கொண்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், இத்தொகுதியில் உள்ள செங்குன்றம் பகுதியில் சுமார் 100 அரிசி ஆலைகள் இயங்குகின்றன. சோழவரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் தனியார் மற்றும் அரசுக்கு சொந்தமாக நூற்றுக்கும் மேற்பட்ட தானியங்கள் உள்ளிட்டவை சேமித்து வைக்கும் சேமிப்பு கிடங்குகள் செயல்படுகின்றன.

ரெட்டியார், யாதவர், தலித் சமூகத்தினர் கணிசமாக வசிக்கும் மாதவரம் தொகுதியில் பிரச்சினைகளுக்கு பஞ்சமில்லை.

குறிப்பாக, செங்குன்றம், ஜி.என்.டி., சாலையில், அரிசி ஆலைகளுக்கு வரும் லாரிகளால் போக்குவரத்து நெரிசல் தொடர்கிறது. சோழவரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில், குடிநீருக்காக தனியார்களால் திருட்டுத்தனமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுகிறது என, பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மாதவரம் தொகுதியில் அரசு பொதுமருத்துவமனை மற்றும் அரசு கலைக்கல்லூரி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புதிய தொழிற்சாலைகள் அமைக்கவேண்டும், சோழவரம் மற்றும் புழல் ஏரிகளை தூர்வாறவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை பொதுமக்கள் நீண்டகாலமாக வைத்து வருகின்றனர்.

இத்தொகுதியில், கடந்த 2011-ம் ஆண்டு முதல் தேர்தலை சந்தித்த அதிமுக வேட்பாளரான முன்னாள் அமைச்சர் வி.மூர்த்தி, 1,15,468 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளரான என்.எஸ். கனிமொழி 80,703 வாக்குகள் பெற்று, 2-ம் இடம் பிடித்தார்.

தொகுதிக்கான புகைப்படம்: (தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்)

2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

து.தஷ்ணாமூர்த்தி

அதிமுக

2

எஸ். சுதர்சனம்

திமுக

3

ஏ.எஸ்.கண்ணன்

இந்திய கம்யூ.

4

கோ.இரவிராஜ்

பாமக

5

ஆர்.எம்.ஆர். ஜானகிராமன்

பாஜக

6

இரா.ஏழுமலை

நாம் தமிழர்

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

அம்பத்தூர் வட்டம் கீழ்கொண்டையூர், ஆலந்தூர், பாண்டேஸ்வரம், அரக்கம்பாக்கம், மோரை, மேல்பாக்கம், கதவூர், வெள்ளச்சேரி, பாலவேடு, வெள்ளானூர், பொத்தூர், பம்மதுகுளம், தீர்க்ககிரியம்பட்டு, பாலவயல், விளாங்காடு பாக்கம், சிறுகாவூர், அரியலூர், கடப்பாக்கம், சடையன்குப்பம், எலந்தஞ்சேரி, மாத்தூர், மஞ்சம்பாக்கம், கொசப்பூர், செட்டி மேடு, வடம்பெரும்பாக்கம், லயன், கிராண்ட் லயான், அழிஞ்சிவாக்கம், அத்திவாக்கம்ம், வடகரை, சூரப்பட்டு, கதிர்வேடு மற்றும் புத்தகரம் கிராமங்கள்.

நாரவாரிக்குப்பம் பேரூராட்சி, புழல் பேரூராட்சி மற்றும் மாதவரம் நகராட்சி.

பொன்னேரி வட்டம் நெற்குன்றம், செக்கஞ்சேரி, சூரப்பட்டு, சோத்துபெரும்பேடு, காரனோடை, ஆத்தூர், புது எருமை, வெட்டிப்பாளையம், பழைய எருமைவெட்டிப்பாளையம், சோழவரம், ஒரக்காடு, புதூர், கண்டிகை, மாரம்பேடு, கும்மனூர், ஆங்காடு, சிருணியம், செம்புலிவரம், நல்லூர், அலமாதி, ஆட்டந்தாங்கல், விஜயநல்லூர் மற்றும் பெருங்காவூர் கிராமங்கள்.

பாடியநல்லூர் .

29/4/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

196493

பெண்

195725

மூன்றாம் பாலினித்தவர்

81

மொத்த வாக்காளர்கள்

392299

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

வாக்குகள்

1

மூர்த்தி

அதிமுக

115468

2

கனிமொழி

திமுக

80703

3

சிவகுமார்

பிஜேபி

2599

4

குமரன்

சுயேச்சை

2135

5

ரமேஷ்

பு பா

1964

6

ஜானகிராமன்

பிஎஸ்பி

1280

7

சீனிவாசன்

ஜே எம் எம்

978

8

ராஜ்

சுயேச்சை

872

9

ஜானகிராமன்

சிபிஐ எம்எல்

408

10

நந்தகுமார்

சுயேச்சை

360

11

மேகநாதன்

சுயேச்சை

233

12

செந்தில்குமார்

சுயேச்சை

193

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in