

நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு அளித்துள்ள ஆதரவு இந்த தேர்தலுக்கானது மட்டுமே. அதுவும் ‘பாஜகவுடன் சேரக்கூடாது’ என்ற எச்சரிக்கை யுடனேயே ஆதரவு அளிக்கப் பட்டுள்ளது என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விளக்கமளித் துள்ளது.
அதிமுகவுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திமுகவை ஆதரிப்பதாக சமீபத்தில் அறிவித்தது. இதை யடுத்து, அந்த அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் ரகமதுல்லா, வட சென்னை மற்றும் தென் சென்னை திமுக வேட்பாளர்கள் கிரிராஜன், டி.கே.எஸ்.இளங் கோவன் ஆகியோருடன் சென்னையில் வியாழக்கிழமை பத்திரிகையாளர்களை சந்தித் தார். அப்போது நிருபர் களிடம் அவர் கூறியதாவது:
முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகரித்துத் தருபவர்களுக்கே ஆதரவளிப் போம் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து தமிழக முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெய லலிதா இடஒதுக்கீட்டை அதிகப்படுத்தித் தருவதாக கூறினார். அதனால் அதிமுக வுக்கு ஆதரவு தெரிவித்தோம்.
ஆனால், பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்த ராமர் கோயில், பொது சிவில் சட்டம், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து உள்ளிட்டவற்றை ஜெயலலிதா விமர்சிக்கவே இல்லை.
மேலும் ஆரம்பத்தில் தன்னை பிரதமராக்க வேண்டு மென்று சூசகமாக கூறிவந்த ஜெயலலிதா திடீரென அதிமுக அங்கம் வகிக்கும் ஆட்சி மலர வேண்டும் என்கிறார். பாஜகவுடன் கூட்டு வைக்கவே ஜெயலலிதா கம்யூனிஸ்ட்களைக் கழற்றி விட்டதாக ஜி.ராமகிருஷ்ணனே கூறினார். பாஜக தொடர்பாக அதிமுகவின் நிலைப்பாடு குறித்து ஜெயலலிதாவோ, அக்கட்சியின் தேர்தல்குழு தலைவர்களோ இதுவரை வாய்திறக்கவில்லை.
இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதி, பொருளா ளர் ஸ்டாலின் ஆகியோர் பாஜகவின் தேர்தல் அறிக் கையை கடுமையாக விமர்சித் தார்கள். எனவே முஸ்லிம் களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் திமுகவுக்கு ‘பாஜக வுடன் சேரக்கூடாது’ என்ற எச்சரிக்கையுடனேயே ஆதரவளித்துள்ளோம்.