

மயிலாடுதுறை வட்டத்தை உள்ளடக்கிய இத்தொகுதியில் மயிலாடுதுறை நகரம், குத்தாலம் பேரூராட்சி உள்ளிட்டவை முக்கிய நகரங்கள். சித்தமல்லி, குறிச்சி, கடுவங்குடி, இளந்தோப்பு, பட்டவர்த்தி, கிழாய், திருவாளப்புத்தூர், வரதம்பட்டு, தலைஞாயிறு, தலைஞாயிறு, சேத்தூர், பொன்மாசநல்லூர், மேலாநல்லூர், வில்லியநல்லூர், தாழஞ்சேரி, நமசிவாயபுரம், பூதங்குடி,முருகமங்கலம், ஆலங்குடி திருமணஞ்சேரி, பொன்னூர், மகராஜபுரம், திருஇந்தளூர், உளுந்தக்குப்பை, மணக்குடி, ஆனைமேலகரம், மூவலூர், சித்தர்காடு, பட்டமங்கலம், மயிலாடுதுறை, நல்லத்துகுடி, செருதியூர், மன்னம்பந்தல், குளிச்சார், கோடங்குடி, அகரகீரங்குடி, கோவங்குடி மற்றும் மறையூர் உள்ளீட்ட பல ஊராட்சி பகுதிகள், குத்தாலம் பேரூராட்சிப் பகுதிகள் ஆகியன அடங்கியுள்ளன.
விவசாயத்தை தவிர வேறு தொழில் வாய்ப்புக்கள் எதுவும் இல்லாத நிலையில் புதிய தொழிற்சாலைகளோ, நிறுவனங்களோ ஏற்படுத்தப் படவில்லை. மணல்மேடு கூட்டுறவு நூற்பாலையை திறக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படவில்லை. தலைஞாயிறு கூட்டுறவு சர்க்கரை ஆலையும் தள்ளாட்டத்தில் உள்ளது. மயிலாடுதுறையில் ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த பல தேர்தல்களிலும் முக்கிய பிரச்சினையாக இருந்து வருவதைப் போல இந்த தேர்தலிலும் தொடர்கிறது. மயிலாடுதுறைக்கு புறவழிச்சாலை, சுற்றுப்பாதை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டும் இன்னும் பணிகள் நடைபெறவில்லை. நகரில் அமைக்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டம் கிட்டத்தட்ட தோல்வி என்று மக்கள் முனுமுனுக்கிறார்கள். நகரிலும், நகரிலிருந்து வெளியூர் செல்லும் சாலைகளூம் சேதமடைந்தே காணப்படுகின்றன.
மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயம், திருமண வரம் தரும் திருமணஞ்சேரி கோயில் உள்ளிட்டவை இத்தொகுதிக்குள் இருக்கிறது. இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் மூன்று முறை திமுகவும், இரண்டு முறை காங்கிரஸும் தலா ஒருமுறை அதிமுக, தமாகா, பா.ஜ.க, தேமுதிக ஆகிய கட்சிகளும் வெற்றி பெற்றுள்ளன.
2016 தேர்தலில் கலம் காணும் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
1 | வீ..ராதாகிருஷ்ணன் | அதிமுக |
2 | க.அன்பழகன் | திமுக |
3 | கே.அருள்செல்வன் | தேமுதிக |
4 | அ.அய்யப்பன் | பா.ம.க |
5 | ச.முத்துக்குமரசாமி | பா.ஜ.க |
6 | ஜே.ஷாகுல் அமீது | நாம் தமிழர் |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
மயிலாடுதுறை தாலுகா (பகுதி) சித்தமல்லி, குறிச்சி, கடுவங்குடி, இளந்தோப்பு, பட்டவர்த்தி, கடம்பாக்கம், முடிகண்டநல்லூர் திருச்சிற்றம்பலம்,கடலங்குடி, ஆத்தூர், கேசிங்கன், கிழாய், திருவாளப்புத்தூர், வரதம்பட்டு, தலைஞாயிறு, தலைஞாயிறு 2பீட், சேத்தூர், பொன்மாசநல்லூர், மேலாநல்லூர், வில்லியநல்லூர், தாழஞ்சேரி, நமசிவாயபுரம், பூதங்குடி, காளி 2பீட், காளி 1, ஜவநல்லூர், கொருக்கை, அருவாப்பாடி, கீழமருதாந்தநல்லூர், தர்மதானபுரம், மொழையூர், ஆனதாண்டபுரம், நீடூர், கங்கணாம்புத்தூர், அருள்மொழிதேவன், பாண்டூர், திருமங்கலம், முருகமங்கலம், ஆலங்குடி திருமணஞ்சேரி, பொன்னூர், மகராஜபுரம், திருஇந்தளூர், உளுந்தக்குப்பை, மணக்குடி, வெள்ளாலகரம், பண்டாரவடை, மாப்படுகை, சோழம்பேட்டை, வாணாதிராஜபுரம், 51,கடலங்குடி, வில்லியநல்லூர், கூத்திரபாலபுரம், ஆனைமேலகரம், மூவலூர், சித்தர்காடு, பட்டமங்கலம், மயிலாடுதுறை, நல்லத்துகுடி, செருதியூர், மன்னம்பந்தல், குளிச்சார், கோடங்குடி, அகரகீரங்குடி, கோவங்குடி மற்றும் மறையூர் கிராமங்கள், மணல்மேடு (பேரூராட்சி), மயிலாடுதுறை (நகராட்சி) மற்றும் குத்தாலம் (பேரூராட்சி)
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் | 1,16,455 |
பெண் | 1,16,675 |
மூன்றாம் பாலினத்தவர் | 9 |
மொத்த வாக்காளர்கள் | 2,33,139 |
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் (1977 - 2011)
ஆண்டு | வெற்றிபெற்றவர் | கட்சி |
2011 | ஏ. ஆர். பால அருட்செல்வம் | தேமுதிக |
2006 | S.ராஜ்குமார் | காங்கிரஸ் |
2001 | ஜெக.வீரபாண்டியன் | பாஜக |
1996 | M.M.S.அபுல்ஹசன் | தமாகா |
1991 | M.M.S.அபுல்ஹசன் | காங்கிரஸ் |
1989 | A.செங்குட்டுவன் | திமுக |
1984 | M..தங்கமணி | அதிமுக |
1984 இடைத்தேர்தல் | K.சத்தியசீலன் | திமுக |
1980 | N.கிட்டப்பா | திமுக |
1977 | N.கிட்டப்பா | திமுக |
2006 தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | ராஜாகுமார்.S | காங்கிரஸ் | 53490 |
2 | மகாலிங்கம்.M | மதிமுக | 51912 |
3 | ராஜேந்தர் T விஜயா | சுயேச்சை | 4346 |
4 | தவமணி.P | தேமுதிக | 2277 |
5 | வாசுதேவன்.P | பாஜக | 1327 |
6 | முத்துசாமி.P | பகுஜன் சமாஜ் கட்சி | 624 |
7 | அமீநுல்லாஹ்.S | தமிழ்நாடு ஜனநாயக காங்கிரஸ் | 531 |
8 | ராஜேந்திரன்.S | சுயேச்சை | 407 |
9 | சுப்பிரமணியன்.A | சமாஜ்வாதி கட்சி | 390 |
10 | வாசுதேவன்.J.M | சுயேச்சை | 308 |
115612 |
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | அருட்செல்வம்.A.R | தேமுதிக | 63326 |
2 | ராஜகுமார்.S | காங்கிரஸ் | 60309 |
3 | மணிமாறன்.B | சுயேச்சை | 6023 |
4 | சேதுராமன்.G | பாஜக | 4202 |
5 | மதியழகன்.S | சுயேச்சை | 1678 |
6 | ஜெயராமன்.S.K | இந்திய ஜனநாயக கட்சி | 1002 |
7 | முருகன்.T | சுயேச்சை | 963 |
8 | மைதிலி.M | பகுஜன் சமாஜ் கட்சி | 790 |
9 | திருகணம்.R | இராஷ்டிரிய ஜனதா தளம் | 712 |
10 | ராஜாராமன்.M | சுயேச்சை | 555 |
11 | அப்துல்ஜஹலீல் | சுயேச்சை | 528 |
12 | வாசுதேவன்.J | சுயேச்சை | 523 |
13 | தில்லைநடராஜன்.R | சுயேச்சை | 431 |
14 | பாரதிதாசன்.G.S | சுயேச்சை | 304 |
15 | திமோதி.T | சுயேச்சை | 263 |
16 | குமார்.M | சுயேச்சை | 238 |
141847 |