204 - சாத்தூர்

204 - சாத்தூர்
Updated on
2 min read

விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் சட்டமன்றத் தொகுதியும் ஒன்று. கர்மவீரர் காமராஜர் சாத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று முதல் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது ஆட்சிக் காலம் பொற்கால ஆட்சிக் காலமாக இன்றும் போற்றப்படுகிறது. ஏராளமான அரசுப் பள்ளிகளைத் திறந்தது, மதிய உணவு திட்டத்தைக் கொண்டுவந்தது உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் காமராஜர் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்டன. கடந்த 1957 மற்றும் 1962ம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சாத்தூர் தொகுதியில் போட்டியிட்டு காமராஜர் வெற்றிபெற்றார். சாத்தூர் தொகுதியில் விவசாயம் மட்டுமின்றி, தீப்பெட்டி, பட்டாசுத் தொழில்களிலும் ஏராளமானோர் ஈடுபட்டடுள்ளனர். பிரசித்திபெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உள்ளதும் இத்தொகுதியில்தான். இத்தொகுதியில் முக்குலத்தோர், நாயுடு உள்ளிட்ட பல்வேறு சமூகத்தினர் பரவலாக வசிக்கின்றனர். தொழில் பூங்கா அமைக்கப்பட வேண்டும் என்பது இத்தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. சாத்தூர் தொகுதியில் சாத்தூர் நகராட்சி, சாத்தூர் ஒன்றியம் மற்றும் அம்மாபட்டி, மேட்டமலை, சின்னகாமன்பட்டி, வடமலாபுரம், படந்தாள், ஆலம்பட்டி, இருக்கன்குடி உள்ளிட்ட 55க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்கள் உள்ளன. சாத்தூர் தொகுதியில் 3 முறை இந்திய தேசிய காங்கிரஸும், ஒரு முறை பார்வர்டு பிளாக் கட்சியும், 4 முறை அதிமுகவும், 4 முறை திமுகவும் வெற்றிபெற்றுள்ளன. கடந்த 2006ல் திமுக சார்பில் போட்டியிட்ட கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனும், 2011ல் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஆர்.பி.உதயகுமாரும் வெற்றிபெற்றனர். இவர் அமைச்சராகவும் உள்ளார்.

2016 தேர்தலில் கலம் காணும் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

எஸ்.ஜி. சுப்பிரமணியன்

அதிமுக

2

வி.ஸ்ரீனிவாசன்

திமுக

3

ஏ.ஆர்.ரகுராமன்

மதிமுக

4

எம் பாலகிருஷ்ணன்

பாமக

5

பி.ஞானபண்டிதன்

பாஜக

6

எஸ்.முத்துவேல் நாச்சியார்

நாம் தமிழர்

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா (பகுதி)

கொங்களாபுரம் கிராமம்.

சிவகாசி தாலுக்கா (பகுதி)

அனுப்பன்குளம், நதிக்குடி, பேர்நாயக்கன்பட்டி, வெற்றிலையூரணி, சுப்ரமணியபுரம், சிந்தப்பள்ளி, சங்கரநத்தம், சல்வார்பட்டி, விஜயரெங்கபுரம், கணஞ்சாம்பட்டி, எதிர்கோட்டை, கொங்கன்குளம், ஆலங்குளம், குண்டாயிருப்பு, கங்காரசெவல், வெம்பக்கோட்டை, விஜயகரிசல்குளம், பனையடிப்பட்டி, அச்சங்குளம், சூரார்பட்டி, கீழாண்மறைநாடு, லெட்சுமிபுரம் மற்றும் அப்பநாயக்கன்பட்டி கிராமங்கள்.

தாயில்பட்டி (சென்சஸ் டவுன்) மற்றும் ஆலங்குளம் (சென்சஸ் டவுன்).

இராஜபாளையம் தாலுக்கா (பகுதி)

கீழராஜகுலராமன், மேலராஜகுலராமன், சம்சிகாபுரம், இராமலிங்காபுரம், வரகுணராமபுரம், கோபாலபுரம், குறிச்சியார்பட்டி, சோழபுரம், நத்தம்பட்டி, வடகரை, தென்கரை மற்றும் கொருக்காம்பட்டி கிராமங்கள்.

சாத்தூர் தாலுக்கா (பகுதி)

அம்மாபட்டி, மேட்டமலை, சின்னகாமன்பட்டி,வடமலபுரம்,படந்தால்கத்தாளம்பட்டி, ஆலம்பட்டி, பெரியகொல்லபட்டி, சின்னகொல்லபட்டி, சத்திரப்பட்டி, சாத்தூர், ஒத்தையல் மேட்டுபட்டி, பந்துவார்பட்டி, சூரன்குடி, ஓத்தையால், கங்காரகோட்டை, சங்கரபாண்டியாபுரம், துலுக்கன்குறிச்சி, சேவல்பட்டி,, குகன்பாறை, சிப்பிபாறை, சேர்வைகாரன்பட்டி, சாணான்குளம், ஊத்துப்பட்டி, இ.இராமநாதபுரம் மற்றும் டி.ரெட்டியாபட்டி கிராமங்கள்.

சாத்தூர் (நகராட்சி) மற்றும் இலாயிரம்பண்ணை (சென்சஸ் டவுன்).

29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,10,254

பெண்

1,13,952

மூன்றாம் பாலினத்தவர்

13

மொத்த வாக்காளர்கள்

2,24,219

தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1952 - 2011 )

ஆண்டு

வெற்றி பெற்ற வேட்பாளர்

கட்சி

வாக்கு விழுக்காடு

2011

உதயகுமார்

அதிமுக

58.32

2006

K.K.S.S.R.இராமச்சந்திரன்

திமுக

49.58

2001

K.K.S.S.R.இராமச்சந்திரன்

திமுக

42.91

1996

K.M.விஜயகுமார்

திமுக

43.2

1991

K.K.S.S.R.இராமச்சந்திரன்

TMK

48.63

1989

S.S.கருப்பசாமி

திமுக

42.01

1984

K.K.S.S.R.இராமச்சந்திரன்

அதிமுக

51.03

1980

K.K.S.S.R.இராமச்சந்திரன்

அதிமுக

55.1

1977

K.K.S.S.R.இராமச்சந்திரன்

அதிமுக

43.24

1971

அழகுதேவர்

அனைத்திந்திய பார்வர்டு பிளாக்

1967

எஸ். ராமசாமி நாயுடு

சுதந்திராக் கட்சி

1962

காமராசர்

இந்திய தேசிய காங்கிரஸ்

1957

காமராசர்

இந்திய தேசிய காங்கிரஸ்

1952

எஸ். ராமசாமி நாயுடு

இந்திய தேசிய காங்கிரஸ்

2006 தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

ராமச்சந்திரன்.K.K.S.S.R.

திமுக

73918

2

சொக்கேஸ்வரன்.G

அதிமுக

53073

3

சங்கரலிங்கம்.S.S.K

தேமுதிக

15391

4

ராஜேந்திரன்.R

பகுஜன் சமாஜ் கட்சி

1560

5

சேதுராமலிங்கம்.G

பார்வார்டு பிளாக்கு

1447

6

வைரமுத்து.G

சுயேச்சை

1104

7

வெற்றிவேல்.R

பாஜக

995

8

ராமச்சந்திரன்.R

சுயேச்சை

610

9

மாரிமுத்து.C

சுயேச்சை

163

10

மனோகரன்.K

சுயேச்சை

152

11

பாலமுருகன்.N

சுயேச்சை

151

12

செல்வம் சவுரிராஜ்.J

சுயேச்சை

122

13

ரமேஷ்.R.R

சுயேச்சை

112

14

அமுதா.S

சுயேச்சை

112

15

மனோகரன்.V

சுயேச்சை

105

16

கந்தசாமி.V

சுயேச்சை

73

149088

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

உதயகுமார்.R.B

அதிமுக

88918

2

கடற்கரைராஜ்.A

திமுக

59573

3

ஜெயசங்கர்.P

சுயேச்சை

1310

4

ரமேஷ்பாபு.S

பகுஜன் சமாஜ் கட்சி

700

5

ராஜகுரு.M

சுயேச்சை

647

6

பாலகிருஷ்ணன்.T.S

இந்திய ஜனநாயக கட்சி

420

7

மாரீஸ்வரன்.S

சுயேச்சை

180

8

முனியசாமி.P

சுயேச்சை

176

9

மாரிமுத்து.S

சுயேச்சை

163

10

அருள் லூர்து ஜோசப் இக்னேசியஸ்

சுயேச்சை

151

11

பழனிச்சாமி.N

சுயேச்சை

128

12

சங்கிலிகுமார்.P

சுயேச்சை

96

152462

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in