192 - மதுரை (தெற்கு)

192 - மதுரை (தெற்கு)
Updated on
1 min read

மதுரை தெற்கு தொகுதி 1951-ம் ஆண்டு உருவாக்கப்பட்டு முதல் தேர்தலை சந்தித்தது. பின்னர் இத்தொகுதி நீக்கப்பட்டது. 2011-ம் ஆண்டு மறுசீரமைப்பின் போது மீண்டும் இதே பெயரில் தொகுதி உருவாக்கப்பட்டது. மதுரை கிழக்கு தொகுதியில் இடம் பெற்றிருந்த பல பகுதிகள் இத்தொகுதிக்கு மாற்றப்பட்டன. மதுரை தெற்கு தாலுகாவில் ஒருபகுதியும், மாநகராட்சியின் 21 வார்டுகள் இந்த தொகுதியில் இடம் பெற்றுள்ளன. திருமலை நாயக்கர் மகால், மாரியம்மன் தெப்பக்குளம், அரசு ராஜாஜி மருத்துவமனை, பாலரெங்காபுரம் அரசு மருத்துவமனை, முனிச்சாலை, காமராஜர் சாலை உட்பட பல பகுதிகள் இந்த தொகுதியில் அடங்கியுள்ளன.

2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்

தொழிலாளர்கள், வணிகர்கள், அரசு ஊழியர்கள் பரவலாக வசித்து வருகின்றனர். காமராஜர் சாலை போக்குவரத்து நெரிசல், வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பு, மாரியம்மன் தெப்பக்குளத்தில் நிரந்தரமாக தண்ணீர் தேக்காதது, சீரமைக்கப்படாத கிருதுமால் நதி வாய்க்கால் என பல பிரச்சனைகள் நீண்ட காலமாக இருந்து வருகின்றன.

1951-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் டி.கே.ரமா(காங்கிரஸ்) வெற்றி பெற்றார். 2011-ம் ஆண்டு தேர்தலில் ரா.அண்ணாதுரை(மா.கம்யூ) வெற்றி பெற்றார்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

மதுரை (மாநகராட்சி) வார்டு எண். 9, 10, 16, 39 மற்றும் 43 முதல் 59 வரை

29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,08,417

பெண்

1,10,800

மூன்றாம் பாலினத்தவர்

6

மொத்த வாக்காளர்கள்

2,19,223

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

அண்ணாதுரை.R

மார்க்சியக் கம்யூனிசக் கட்சி

83441

2

வரதராஜன்.S.P

காங்கிரஸ்

37990

3

அன்னுபனடிஜெயா.K

சுயேச்சை

6243

4

சாந்தராம்.N.S.R

பகுஜன் சமாஜ் கட்சி

6204

5

ஜோசெபின்மேரி.A

இந்திய ஜனநாயக கட்சி

1061

6

ராஜன்.N.R

சுயேச்சை

533

135472

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in