

தொகுதி மறுசீரமைப்பின் போது உருவான புதிய தொகுதி.
கோவை மாநகராட்சிக்குட்பட்ட கணபதி, காந்தி மாநகர் உள்ளிட்ட பகுதிகளுடன், மேலும் 2011ம் ஆண்டு மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட வடவள்ளி, வீரகேரளம் உள்ளிட்ட பகுதிகளையும் இணைத்து கோவை வடக்கு தொகுதி உருவாக்கப்பட்டது.
கோவை மாநகரின் வடக்கு பகுதிகளை பிரதானமாக கொண்டது. வடகோவை ரயில்நிலையம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம், பாரதியார் பல்கலைகழகம், அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகம் உள்ளிட்டவை இங்குள்ள குறிப்பிடத்தக்க முக்கிய இடங்கள். சிறு, குறு தொழில் கூடங்கள் நிறைந்த பகுதியாகவும், பல தரப்பட்ட மக்களை உள்ளடக்கிய பகுதியாகவும் அறியப்பட்டது கோவை வடக்கு தொகுதி. இத்தொகுதியிலும் அதிகளவில் கவுண்டர்கள் சமூக மக்களும், அடுத்தபடியாக போயர்கள், அருந்ததியர்கள் வசிக்கின்றனர்.
இத்தொகுதியில் தொழில் வளர்ச்சி, கட்டமைப்பு வசதிகள் சற்று குறைவாகவே காணப்படுகிறது. போக்குவரத்து நெரிசல் என்பது பிரதான பிரச்சினையாக உள்ளது. மாநகர பகுதிகளை, மற்ற ஊர்களையும் இணைக்கும் தயிர் இட்டேரி சாலை, ஆவராம்பாளையம் சாலைகளில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டுமென்பது நீண்ட கால கோரிக்கை. மாநகராட்சியில் இணைக்கப்பட்ட வடவள்ளி, வீரகேரளம் பகுதிகளில் 5 ஆண்டுகளுக்கு மேலாக உட்கட்டமைப்பு வசதிகள் சரிவர முடிவடையவில்லை.
முன்னர் இருந்த மின்வெட்டு பிரச்சினையால், இத்தொகுதியின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்கூடங்கள் பணியானை (ஜாப்ஆர்டர்) குறைவினால் உற்பத்தி இழப்பை சந்தித்தன. மின்வெட்டு பிரச்சினை குறைந்தாலும், உற்பத்தி விகிதத்தில் தொழில்துறை எழுச்சி பெறாமல் இருப்பது வேதனை. தொழில் வளர்ச்சியை மேம்படுத்த 10 இடங்களில் தொழிற்பேட்டைகள் அமைத்து தர வேண்டும், பணியானை குறைவு, உற்பத்தி இழப்பு பிரச்சினைகளை சமாளிக்க 25 % உற்பத்திப் பொருட்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும், மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் (அ) சலுகை முறையில் மின் இணைப்பு வழங்க வேண்டுமென்பது இங்குள்ள குறுந்தொழில் முனைவோர்கள் கோரிக்கையாக உள்ளது.
தமிழக வீட்டு வசதி வாரியத்தின் புறநகர் திட்டத்தின் கீழ், கோவை கணபதி மாநகர் பகுதியில் பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டதில் முழுத் தொகையையும் செலுத்திய பயனாளிகளுக்கு வீடுகளுக்கான பத்திரம் கிடைக்கவில்லை என்பது தொடரும் குற்றச்சாட்டாக உள்ளது. பாரதியார் பல்கலைக்கழகம் அமைப்பதற்காக நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு 40 ஆண்டுகளுக்கு மேலாக இழுத்தடிக்கப்பட்டு வந்த இழப்பீடு பல போராட்டங்களுக்குப் பின் இந்த ஆட்சியில் வழங்கப்பட்டது. நீண்ட நாள் கோரிக்கையான ரத்தினபுரி - ஜீவானந்தம் சாலை மேம்பாலம் திறக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் சாலைகள் முறையாக செப்பனிடப்பட்டுள்ளன.
இத்தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக கடந்த 2011ம் ஆண்டில் அதிமுக வேட்பாளர் தா.மலரவன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தொகுதி மறுசீரமைப்பு :
2007ஆம் ஆண்டு நடந்த தொகுதி மறுசீரமைப்பின்போது, கோயம்புத்தூர் கிழக்கு என அழைக்கப்பட்டு வந்த சட்டமன்றத் தொகுதியானது கோயம்புத்தூர் வடக்கு என பெயர்மாற்றம் பெற்றது.
2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
1 | பி.ஆர்.ஜி.அருண்குமார் | அதிமுக |
2 | மீனாலோகு | திமுக |
3 | எஸ்.எம். முருகேசன் | தேமுதிக |
4 | காமராஜ் நடேசன் | பாமக |
5 | கண்ணன் (எ) எஸ்.தேவராஜ் | பாஜக |
6. | சி.பி.பாலேந்திரன் | நாம் தமிழர் |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
கோயம்புத்தூர் வடக்கு தாலுகா (பகுதி) -வீரகேரளம் (பேரூராட்சி)
கோயம்புத்தூர் தெற்கு தாலுகா (பகுதி) வடவள்ளி (பேரூராட்சி),
கோயம்பத்தூர் (மாநகராட்சி) வார்டு எண் 57 முதல் 72 வரை.
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் | 1,53,448 |
பெண் | 1,50,803 |
மூன்றாம் பாலினத்தவர் | 14 |
மொத்த வாக்காளர்கள் | 3,04,265 |
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | மலரவன்.T | அதிமுக | 93276 |
2 | வீரகோபால்.M | திமுக | 53178 |
3 | சுப்பையன்.G.M | பாஜக | 4910 |
4 | துரைராஜ்.K | லோக் சட்ட கட்சி | 1887 |
5 | சதிஷ்குமார்.T | உழைப்பாளி மக்கள் கட்சி | 975 |
6 | சாமிநாதன்.M.S | சுயேச்சை | 748 |
7 | புஷ்பனந்தம்..V | பகுஜன் சமாஜ் கட்சி | 308 |
155282 |