120 - கோயம்புத்தூர் (தெற்கு)

120 - கோயம்புத்தூர் (தெற்கு)
Updated on
2 min read

கோவை மாவட்டத் தலைமையிடமாக இருப்பது கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி, தொழில்வளர்ச்சியிலும், கல்வி வளர்ச்சியிலும் மேம்பட்டுள்ளது. மணிக்கூண்டு, கோவையின் கோனியம்மன் கோவில், விக்டோரியா மகாராணி நினைவாக 1892ல் கட்டப்பட்ட நகர் மண்டபம் (மாநகராட்சி கட்டிடம்) ஆகியவை இத்தொகுதியின் அடையாளங்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த கோவை மாவட்டத்தின் அடையாளங்கள்.

நகரின் மையமாகவும், வணிக கேந்திரமாகவும் உள்ள டவுன்ஹால், காந்திபுரம், உக்கடம், அரசுத்துறை அலுவலகங்களான மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, காவல் ஆணையர் அலுவலகம், புதிதாக உருவாகி வரும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், மத்திய தந்தி அலுவலகம், மத்திய சிறைச்சாலை, வ.உ.சி பூங்கா, நேரு விளையாட்டு அரங்கம், கோவை ரயில் நிலையம், உக்கடம் மற்றும் காந்திபுரத்தில் உள்ள உள்ளூர், வெளியூர் பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட இடங்கள் இத்தொகுதியின் மிக முக்கியமான இடங்கள்

தொகுதி மறுசீரமைக்கப்பில் கோவை மேற்கு, கோவை கிழக்கு தொகுதிகள் நீக்கப்பட்டதும், அவற்றிலிருந்து தெற்கு தொகுதி புதிதாக உருவானது. இத்தொகுதி முழுக்க முழுக்க நகரப்பகுதி என்பதால் பலதரப்பட்ட சமூகத்தினரும் வசிக்கின்றனர். குறிப்பாக இசுலாமியர்கள், இந்துக்கள், வடமாநிலத்தவர்கள் அதிகமாக வசிக்கின்றனர்.

வியாபார, போக்குவரத்து, அரசு அலுவல் சார்ந்த மைய பகுதியாக இருப்பதால், போக்குவரத்து நெரிசல் பிரதான பிரச்சினையாக இருக்கிறது. அடிக்கடி பழுதடையும் பாதாள சாக்கடை குழாய்கள் நெரிசலை மேலும் அதிகப்படுத்தி வருகின்றன. மேலும் உட்கட்டமைப்பு வசதிகள், குடிநீர் பிரச்சினை ஆகியவை பல வருடங்களாகத் தொடருகின்றன.

மாநகராட்சி மேயர் இடைத் தேர்தலின் போது, ரூ.2374 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்கள் கோவை மாநகராட்சிக்கு அறிவிக்கப்பட்டது. நெரிசலை குறைக்க, புறநகர் பகுதியான வெள்ளலூரில் ரூ.125 கோடி மதிப்பிட்டில், ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், உக்கடம் லாரிப்பேட்டை இடமாற்றம், மேட்டுப்பாளையம் சாலை, சத்தி சாலை, அவினாசி சாலை மற்றும் திருச்சி சாலைகளை இணைத்து அரை வட்ட சாலை அமைப்பது, காந்திபுரம், ஆர்.எஸ்.புரம், டவுன்ஹாலில் பல அடுக்கு வாகன நிறுத்துமிடங்கள், ஆத்துப்பாலம் - டவுன்ஹால் உயர் மட்ட மேம்பாலம், மேற்கு புறவழிச்சாலை, ரூ.1550 கோடி மதிப்பில் 1745 கி.மீ நீளம் மழைநீர் வடிகால் வசதி, சேதமடைந்த சாலைகள் சீரமைக்க ரூ. 60 கோடி, கட்டிட கழிவுகள் மறு சுழற்சிக்கு ரூ.12.80 கோடி என்ற திட்டங்கள் அனைத்தும் அறிவிப்புகளோடு நிற்கின்றன.

மெட்ரோ இரயில் திட்டத்துக்கு தேர்வான நகரங்களில் கோவையும் உள்ளது. 2011 சட்டப்பேரவைத் தேர்லுக்கு அதிமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் கோவைக்கு மோனோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதுவரையிலும் இவ்விரு திட்டங்களுக்கு செயல்வடிவம் பெறாமலேயே இருக்கின்றன. லங்கா கார்னர் பாலம், அவிநாசி சாலை மேம்பாலம், வடகோவை அருகே உள்ள ரயில்வே பாலம் ஆகியவை மழைக்காலங்களில் நீரில் மூழ்கி நகரையே இரு துண்டுகளாக பிரிக்கும் அவலத்துக்கு முடிவு கட்டப்படவில்லை.

கோவை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் பல்வேறு வசதிகளுடன் கூடிய நூற்றாண்டு விழா கட்டிடம் திறப்பு, ரூ.162 கோடியில் தயாராகிவரும் காந்திபுரம் 2 அடுக்கு மேம்பாலம், ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் புதிய வசதிகள் கிடைக்கும் என்ற அறிவிப்பு, நீர் நிலைகள் புனரமைக்கும் திட்டம், புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் உள்ளிட்டவை இந்த ஆட்சியில் கோவை தெற்கு தொகுதிக்கு கிடைத்துள்ள வசதிகள்.

2011ல் அதிமுக வேட்பாளர் சேலஞ்சர் துரை (எ) துரைசாமி வெற்றி பெற்று இத்தொகுதிக்கு முதல் சட்டப்பேரவை உறுப்பினர் ஆனார்.

தொகுதி மறுசீரமைப்பு :

2007ஆம் ஆண்டு நடந்த தொகுதி மறுசீரமைப்பின்போது, அதுவரை கோயம்புத்தூர் மேற்கு என அழைக்கப்பட்டுவந்த சட்டமன்றத் தொகுதியானது கோயம்புத்தூர் தெற்கு என பெயர்மாற்றம் பெற்றது.

2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

அம்மன் கே.அர்ஜூணன்

அதிமுக

2

மயூரா எஸ்.ஜெயகுமார்



காங்கிரஸ்

3

சி.பத்மநாபன்

மார்க்சிஸ்ட்

4

கி.பழனிசாமி.

பாமக

5

வானதி சீனிவாசன்

பாஜக

6

பி.பெஞ்சமின் ப்ராங்க்ளின்

நாம் தமிழர்

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

கோயம்புத்தூர் (மாநகராட்சி) வார்டு எண் 21 முதல் 47 வரை

29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,22,691

பெண்

1,22,510

மூன்றாம் பாலினத்தவர்

6

மொத்த வாக்காளர்கள்

2,45,207

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

துரைசாமி.R (எ) சேலஞ்சர் துரை

அதிமுக

80637

2

பொங்கலூர் பழனிசாமி.N

திமுக

52841

3

நந்தகுமார்.C.R

பாஜக

5177

4

விஜய் ஆனந்த்.M

லோக் சட்ட கட்சி

1765

5

ஈஸ்வரன்.G.R

இந்திய ஜனநாயக கட்சி

573

6

முஹம்மத் அனீஸ்.M.L

சுயேச்சை

384

7

கோவிந்தராஜ்.B

பகுஜன் சமாஜ் கட்சி

333

8

சரவணன்.N

சுயேச்சை

324

9

லாசர்.T

சுயேச்சை

313

10

ரவி.C (எ) ரவி தேவேந்திரன்

தமிழக முன்னேற்றக் கழகம்

259

11

போகலூர் பழனிசாமி.S

சுயேச்சை

251

12

முருகன்.M

சுயேச்சை

177

13

பாபுராஜன்.R

சுயேச்சை

158

14

சிவராஜ்.V

சுயேச்சை

102

143294

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in