

தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு காஞ்சிபுரம் மாவட்டத்தில் உருவாக்கப்பட்டது சோழிங்கநல்லூர் தொகுதி. இந்த தொகுதியில் உள்ளகரம், புழுதிவாக்கம், மாடம்பாக்கம், பள்ளிக்கரணை, நாராயணபுரம், பெருங்குடி, கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, ஒக்கியம் துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், மேடவாக்கம், பெரும்பாக்கம், வேங்கைவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் அடங்கியுள்ளன. வன்னியர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் அதிகம் வசிக்கு தொகுதியில் மீனவர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், பிராமணர்கள் மற்றும் இதர வகுப்பினரும் வசித்து வருகின்றனர். ஐடி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளன. பெருங்குடி குப்பை கிடங்கு மற்றும் மிகப்பெரிய சதுப்புநிலப் பகுதி சோழிங்கநல்லூர் தொகுதியில் அமைந்துள்ளன. கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மகாபலிபுரம் சாலையில் பொழுது போக்கு மையங்கள், பண்ணை வீடுகள் நிறைய இருக்கின்றன. சோழிங்கநல்லூர் தொகுதியின் முக்கிய அடையாளமாக ஐடி நிறுவனங்கள் திகழ்கின்றன.
சோழிங்கநல்லூர் தொகுதியில் முக்கிய பிரச்சினையாக போக்குவரத்து நெரிசல் உள்ளது. பழைய மகாபலிபுரம் சாலை, கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட சாலைகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கிறது. வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் விபத்துகளும் அதிக அளவில் நடக்கிறது. தாம்பரம் தொகுதியில் இருந்து சோழிங்கநல்லூர் தனி தாலுகாவாக பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தாசில்தார் அலுவலகம் மற்றும் உணவு பொருள் வட்ட அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் தனியாக திறக்கப்பட்டது. ஆனால் அரசு மருத்துவமனை ஒன்றை அமைக்க வேண்டும். உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்பது தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. அதேபோல் கிழக்கு கடற்கரை சாலையில் இரவு 10 மணிக்கு மேல் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுவதால், இரவு நேரங்களில் போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
தமிழகத்திலேயே அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதியாக சோழிங்கநல்லூர் தொகுதி உள்ளது. ஆண் வாக்காளர்கள் 2 லட்சத்து 91 ஆயிரத்து 909 பேரும், பெண் வாக்காளர்கள் 2 லட்சத்து 83 ஆயிரத்து 819 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 45 பேரும் என மொத்தம் 5 லட்சத்து 75 ஆயிரத்து 773 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த 2011-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலை முதல் முறையாக கோழிங்கநல்லூர் தொகுதி சந்தித்தது. அதிமுக சார்பில் போட்டியிட்ட கே.பி.கந்தன் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை இரண்டாவது முறையாக சந்திக்கிறது சோழிங்கநல்லூர் தொகுதி.
2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
1 | என்.சுந்தரம் | அதிமுக |
2 | எஸ்.அரவிந்த் ரமேஷ் | தி.மு.க |
3 | பன்னீர்தாஸ் | விசிக - ம.ந.கூட்டணி) |
4 | கே.ராம்குமார் | பாமக |
5 | உஜகர் சிங் | பாஜக |
6 | எஸ்.ராஜன் | நாம் தமிழர் |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
தாம்பரம் வட்டம் நன்மங்கலம், கோவிலம்பாக்கம், மேடவாக்கம், காரப்பாக்கம், பெரும்பாக்கம், வேங்கைவாசல், சிட்லப்பாக்கம், ஒட்டியம்பாக்கம், அரசன்கழனி, செம்மஞ்சேரி மற்றும் உத்தண்டி கிராமங்கள். புழுதிவாக்கம் (உள்ளகரம்) (நகராட்சி), பெருங்குடி (பேரூராட்சி), கொட்டிவாக்கம் (சென்சஸ் டவுன்), ஈஞ்சம்பாக்கம் (சென்சஸ் டவுன்), பாலவாக்கம் (சென்சஸ் டவுன்), நீலாங்கரை (செசன்ஸ் டவுன்), ஒக்கியம்துரைப்பாக்கம் (சென்சஸ் டவுன்),பள்ளிக்கரணை (பேரூராட்சி), மடிப்பாக்கம் (செசன்ஸ் டவுன்), ஜல்லடியன்பேட்டை (செசன்ஸ் டவுன்) மற்றும் சோளிங்கநல்லூர் (பேரூராட்சி)
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் | 3,02,772 |
பெண் | 2,99,573 |
மூன்றாம் பாலினத்தவர் | 62 |
மொத்த வாக்காளர்கள் | 6,02,407 |
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2011 தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | KP.கந்தன் | அதிமுக | 145385 |
2 | S.S.பாலாஜி | வி சி க | 78413 |
3 | மோகன் தாஸ் காந்தி | பிஜேபி | 7275 |
4 | உத்திராபதி | பி எஸ் பி | 1983 |
5 | சிங்கராஜ் | ஐ ஜே கே | 1666 |
6 | நரசிம்மன் | சுயேச்சை | 1648 |
7 | ரவி | சுயேச்சை | 1127 |
8 | அன்புமொழி | பு பா | 796 |
9 | ஷீலா | MGRTK | 708 |
10 | தாமோதரன் | எம்எம்கேஎ | 694 |
11 | கந்தசாமி | சுயேச்சை | 453 |
12 | அங்கமுத்து | சுயேச்சை | 435 |
240583 |