தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. தேர்தல் அறிக்கை

தூத்துக்குடி  மாவட்ட தி.மு.க. தேர்தல் அறிக்கை
Updated on
1 min read

1. தூத்துக்குடியில் சரக்கு உந்துகள் நிறுத்துவதற்குத் தனி முனையம் ஏற்படுத்தித் தரப்படும்.

2. திருவைகுண்டத்திற்கும் ஆத்தூருக்கும் இடையே தாமிரபரணியில் தகுதியான இடத்தில் ஒரு அணை கட்டப்படும்.

3. விளாத்திகுளம் தொகுதியில் குளிர்பதன வசதியுடன் கூடிய மிளகாய் வத்தல் குடோன் அமைக்கப்படும்.

4. காயல்பட்டினம் மற்றும் கோவில்பட்டி நகருக்குப் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

5. தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி நதியில் உள்ள வடகால் தென்கால், மருது மேலக்கால், கீழக்கால் வாய்க்காலில் உள்ள 53 குளங்களையும் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும்.

6. கோவில்பட்டி நகரில் இரண்டாவது குடிநீர்த் திட்டம் நிறைவேற்றப்பட நடவடிக்கை எடுக்கப்படும்.

7. கோவில்பட்டி அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in