சிவகங்கை மாவட்ட தி.மு.க. தேர்தல் அறிக்கை

சிவகங்கை மாவட்ட தி.மு.க. தேர்தல் அறிக்கை
Updated on
1 min read

1. மானாமதுரை வைகை ஆற்றின் குறுக்கே கன்னார் தெரு கிருஷ்ணராஜபுரத்தில் மேம்பாலம் அமைக்கப்படும்.

2. காரைக்குடி - மதுரை நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றி அமைக்கப்படும்.

3. சிவகங்கை அருகே மிளகாய் வற்றல், வெந்தயம் போன்ற பொருட்களுக்கான விற்பனைப் பூங்கா மத்திய அரசால் தொடங்கப்பட்டு, தற்போது செயல்படாத நிலையில் உள்ளதை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

4. காரைக்குடி அருகில் கோவிலூரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கெமிக்கல்ஸிலிருந்து வெளிவரும் ரசாயனக் கழிவு நீரைச் சுத்திகரித்து சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

5. மானாமதுரை வட்டத்தில் 16 கிராம விவசாயிகள் பயன்பாட்டிற்கென தொடங்கப்பட்ட நாட்டார் கால்வாய்த் திட்டம் தற்போது செயல்படாமல் உள்ளது. அத்திட்டத்தை மீண்டும் புதுப்பித்துச் செயல்பாட்டிற்குக் கொண்டு வந்து 16 கிராமக் கண்மாய்கள் நீர்ப் பாசனத்திற்குத் தண்ணீர் கிடைக்க ஆவன செய்யப்படும்.

6. திருப்பத்தூர் வட்டத்தை இரண்டாகப் பிரித்து சிங்கணம்புணரியைத் தலைமையிடமாகக் கொண்டு தனி வட்டம் உருவாக்கப்படும்.

7. சிவகங்கை மாவட்டத்தில் வேளாண்மை கல்லூரி அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in