

1. திருப்பத்தூர் நகரில் புறவழிச்சாலை அமைக்கப்படும்.
2. திருப்பத்தூரில் விவசாய விளைபொருட்களைச் சேமித்து வைக்கக் குளிர்பதனக் கிடங்கு அமைக்கப்படும்.
3. கிருஷ்ணகிரியில் உள்ள படேதால் ஏரியிலிருந்து கால்வாய் வெட்டி வெலக்கல் நத்தம் செட்டேரியில் தண்ணீர் நிரப்பப்படும்.
4. சோளிங்கர் அருள்மிகு லெட்சுமி நரசிம்மர் கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் வசதிக்காக ரோப் கார் திட்டம் செயல்படுத்தப்படும்.
5. ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை வேலூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களுக்கு விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
6. வேலூர் மாநகரின் வெளியே சுற்றுச்சாலை அமைக்கப்படும்.
7. வேலூர் மாநகரில் நவீன வசதியுடன் கூடிய பேருந்து நிலையம் அமைக்கப்படும்.
8. வேலூர் சி.எம்.சி மருத்துவமனை ஆற்காடு சாலையிலும், காட்பாடி சாலையிலும், வெங்கடேஸ்வரா பள்ளி அருகிலும் சுரங்கப் பாதைகள் அமைக்கப்படும்.
9. வேலூரில் தோல் தொழிற்சாலைகளுக்கான சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கப்படும்.
10. வேலூர் அரசு மருத்துவமனையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மையம் தொடங்கப்படும்.
11. அரியூர் கூட்டுறவு நூற்பாலை மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்.
12. பேரணாம்பட்டு அருகே பத்தரபல்லி ஊராட்சியில் முந்தைய கழக ஆட்சியில் தொடங்கப்பட்டு, தற்போது நிறுத்தப்பட்டுள்ள மலட்டாற்றில் அணைகட்டும் பணி மீண்டும் தொடங்கப்படும்.
13. இஸ்லாமிய மக்கள் அதிகம் உள்ள பேரணாம்பட்டில் உருது பள்ளிக்கூடம் அமைக்கப்படும்.
14. வாணியம்பாடி புதுநகரில் இரயில்வே மேம்பாலம் கட்டப்படும்.
15. வாணியம்பாடியில் பாதாள சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்படும்.
16. வாணியம்பாடி – தெக்குப்பட்டில் மூடிக்கிடக்கும் சந்தன ஆலை திறக்கப்பட்டு மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்.
17. ஜோலார்பேட்டை அரசு மருத்துவமனையில் புற்று நோய் மையம் தொடங்கப்படும்.
18. ஆம்பூரில் சுற்றுச்சாலை அமைக்கப்படும்.
19. ஆவாரம்குப்பம் திம்மம்பேட்டை இடையே பாலாற்றில் மேம்பாலம் அமைக்கப்படும்.
20. ஆலங்காயம் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்தப்படும்.
21. வேலூரில் தோல் பதனிடும் தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் கழிவு நீரைச் சுத்திகரிக்கும் திட்டம் நிறைவேற்றப்படும்.
22. அணைக்கட்டு தொகுதியில் சாத்தனூர் அணையிலிருந்து ஒடுகத்தூர் குடிநீர்த் திட்டம் நிறைவேற்றப்படும்.
23. குடியாத்தம் நகரில் புறவழிச்சாலை அமைக்கப்படும்.