விருதுநகர் மாவட்ட தி.மு.க. தேர்தல் அறிக்கை

விருதுநகர் மாவட்ட தி.மு.க. தேர்தல் அறிக்கை
Updated on
1 min read

1. விருதுநகர் மாவட்டத்தில் நிலையூர் – கம்பிக்குடி, சென்னம்பட்டி கால்வாய்த் திட்டங்கள் முழுமையாகச் சீரமைக்கப்பட்டு நிறைவேற்றப்படும்.

2. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 1600 கிராமங்களுக்குத் தாமிரபரணி தண்ணீர் சரியான முறையில் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.

3. திருவில்லிபுத்தூர் – அழகர் அணைத் திட்டம் செயல்படுத்தப்படும்.

4. காரியாப்பட்டியில் சார்பு நீதிமன்றம் அமைக்கப்படும்.

5. காரியாப்பட்டியில் போக்குவரத்துப் பணிமனை அமைக்கப்படும்.

6. விருதுநகரில் லாரி பேட்டை அமைத்து அனைத்து லாரிகளும் நிற்பதற்கு ஏற்பாடு செய்யப்படும்.

7. பாத்திரங்கள் உற்பத்தி வரி விதிப்பு அளவு 10 இலட்சம் ரூபாய் என்பது 15 இலட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.

8. திருச்சுழி காணல் ஓடை தூர்வாரப்படும்.

9. திருச்சுழி – நரிக்குடி பகுதியில் அரசுக் கலைக்கல்லூரி அமைக்கப்படும்.

10. திருமங்கலம் இராஜபாளையம் தென்காசி வழியாக செங்கோட்டைக்கு நான்கு வழிச்சாலையாக அமைக்கப்படும்.

11. கல்லூரணி – திருச்சுழி; கல்லூரணி – மீனாட்சிபுரம்: கல்லூரணி – ஆலப்பட்டி; கல்லூரணி – மேலகண்டமங்கலம் சாலை வசதிகள் மேம்படுத்தப்படும்.

12. இராஜபாளையத்தில் பழங்கள் மற்றும் காய்கறிகள் குளிர்பதனக் கிடங்கு அமைக்கப்படும்.

13. இராஜபாளையம் வடக்கு தேவதானம் பெரிய குளம் கண்மாய் பாசனப் பகுதிகளிலுள்ள வாய்க்கால்கள் சிமெண்ட் கான்கீரிட் போட்டுச் சரிசெய்யப்படும்.

14. கன்னியா மதகு தடுப்பணை சீர்செய்யப்படும்.

15. தெற்காறு, குண்டாறு பாசன வசதித் திட்டம் நிறைவேற்றப்படும்.

16. இராஜபாளையம் - சத்திரப்பட்டி சாலையில் உள்ள இரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்கப்படும்.

17. திருவில்லிபுத்தூர் - இராஜபாளையம் நகரங்களில் புறவழிச்சாலை அமைக்கப்படும்.

18. இராஜபாளையம் நகராட்சியில் கூட்டுக்குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்படும்.

19. அருப்புக்கோட்டையில் சாயப்பட்டறை வளாகம் அமைக்கப்படும்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in