மதுரை மாவட்ட தி.மு.க. தேர்தல் அறிக்கை

மதுரை மாவட்ட தி.மு.க. தேர்தல் அறிக்கை
Updated on
2 min read

1. மதுரை மாநகர் மையத்தில் உள்ள வெங்காய மண்டி, பழக்கடை மண்டி ஆகியன புறநகரில் அமைக்கப்படும்.

2. மதுரை காளவாசல் பகுதியில் மேம்பாலம் அமைக்கப்படும்.

3. மதுரையில் புறவழிச்சுற்றுச் சாலை அமைக்கப்படும்.

4. மதுரை நகர் - ஜெய்கிந்துபுரம் இஸ்லாமியர்களின் வசதிக்காக வில்லாபுரம் கண்மாய்ப் பகுதியில் 411-11 என்ற சர்வே எண்ணில் காலியாக

உள்ள வீட்டுவசதி வாரியத்தின் பொறுப்பிலுள்ள பயனற்ற மேட்டுப்பாங்கான பகுதியில் கபர்ஸ்தான் (அடக்கஸ்தலம்) அமைப்பதற்கு இடம் ஒதுக்கித்தரப் பரீசிலிக்கப்படும்.

5. மதுரை நகரில் பெரியார் பேருந்து நிலையம் அருகிலும், கோரிப்பாளையம் தேவர் சிலை அருகிலும் பறக்கும் மேம்பாலங்கள் அமைக்கப்படும்.

6. மதுரையில் பூக்கள் வைப்பதற்கான குளிர்பதனக் கிடங்கு அமைக்கப்படும்.

7. மதுரை – சந்தைப்பேட்டை நீரேற்றும் நிலையம் அருகில் சலவைத் தொழிலாளர்கள் பயன்பாட்டுக்கென்று ஆழ்துளைக் கிணற்றுடன் கூடிய சலவைக் கூடம் அமைக்கப்படும்.

8. பெரியார் பாசனத் திட்டம் கொட்டாம்பட்டி வரை விரிவுபடுத்தப்படும்.

9. சேடப்பட்டி – டேராபாறை நீர்தேக்கத் திட்டம் செயல்படுத்தப்படும்.

10. உசிலம்பட்டி பகுதியில் வறண்ட 58 கிராமங்களுக்குப் பாசனவசதி அளிப்பதற்காக முந்தைய தி.மு.கழக ஆட்சியில் கொண்டுவந்த திட்டம் தற்போது முடக்கி வைக்கப்பட்டுள்ளது. அந்தக் கிராமங்களுக்குப் பாசன வசதியை உறுதிப்படுத்தும் வகையில் 58 ஆம் கால்வாய் திட்டம் மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

11. உசிலம்பட்டியில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும்.

12. உசிலம்பட்டியில் மகளிர் மேல்நிலைப்பள்ளி தொடங்கப்படும்.

13. உசிலம்பட்டியில் மதுரை - தேனி சாலையில் மேம்பாலம் அமைக்கப்படும்.

14. வாடிப்பட்டி வட்டம் சிறுமலை தென்பகுதியிலுள்ள 35 க்கு மேற்பட்ட கிராமங்களில் முல்லைப் பெரியாறு பிரதான கால்வாயிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து சாத்தையார் அணையுடன் இணைத்துப் பாசன வசதியை பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

15. வாடிப்பட்டியில் உற்பத்தியாகும் பட்டுக்கூடுகளை கதர் வாரியம் மூலம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

16. மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் அருகே அறிவிக்கப்பட்ட தகவல் தொழில்நுட்பப் பூங்கா மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்.

17. மதுரை - பண்டியராஜபுரம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் தொடங்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும்.

18. 1920 ஏப்ரல் 3ல் ஆங்கிலேயக் காவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட போராளிகளின் நினைவாகப் பெருங்காமநல்லூர் கிராமத்தில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும்.

19. சோழவந்தானில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும்.

20. சோழவந்தானில் பழங்கள் , காய்கறிகள் , பூக்கள் சேமித்து வைக்க குளிர்பதனக் கிடங்கு அமைக்கப்படும்.

21. சோழவந்தான் அரசுப் பொது மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு 24 மணிநேரமும் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்.

22. அலங்காநல்லூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் மீண்டும் மின் உற்பத்தித் திட்டம் தொடங்கப்படும்.

23. மதுரை நகரின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் மாடக்குளம் கண்மாயில் நிரந்தர நீர்த் தேக்கம் அமைக்கப்படும்.

24. மதுரை கிழக்கு தொகுதியில் மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்டுள்ள ஆனையூர், திருப்பாலை, கண்ணனேந்தல், நாகனாகுளம், வண்டியூர், உத்தங்குடி ஆகியவற்றில் உள்ள 11 வார்டுகளிலும் பாதாள சாக்கடை அமைக்கப்படும்.

25. திருமங்கலத்தில் பாதாள சாக்கடை மற்றும் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும்.

26. வண்டியூர் மாரியம்மன் தெப்பக் குளத்தில் எந்நாளும் நீர் நிறைந்து இருக்க ஏற்பாடு செய்யப்படும். முன்பு போல் மைய மண்டபத்திற்குச் சென்று வர படகுகள் விடப்படும்.

27. மதுரை வடக்குத் தொகுதி வண்டியூர் கண்மாய் ஆண்டு முழுவதும் நீர் நிரப்பி படகுகள் விடப்பட்டுச் சுற்றுலாத் தலமாக அறிவிக்கப்படும்.

28. நாகணாகுளம் கண்மாய் தூர்வாரப்பட்டு, அதன் கரை முழுவதும் நடைபாதையும் பூங்காவும் அமைக்கப்பட்டு, முன்பு போல் மிதிபடகுகள் விடப்படும்.

29. வைகைப் பாலம் அருகே உள்ள பழமையான செல்லூர் கண்மாய் தூர்வாரப்பட்டு, நீர் நிறைந்திருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

30. மதுரை மாநகரில் தி.மு.கழக ஆட்சியில் வைகை ஆற்றங்கரை இரண்டிலும் போடப்பட்ட சாலைகள் முழுவதுமாக முடிக்கப்படாமல் போக்குவரத்திற்கு முழுமையாகப் பயன்படுத்த இயலாமல் உள்ளது, அவ்விரண்டு சாலைகளும் மதுரை மாநகர் எல்லை முழுவதும் மேம்படுத்தப்பட்டு மேலும் விரிவுபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

31. மதுரை சுப்பிரமணியபுரம் ரயில்வே பாதையின் கீழ் சுரங்கப் பாதை அமைக்கப்படும்.

32. மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள அரசினர் ஓமியோபதி மருத்துவக் கல்லூரியை உயர் ஆராய்ச்சி மையமாகத் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in