

நீலகிரி
1. நீலகிரியில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்படும்.
2. தேயிலை விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கும் சிறப்புத் திட்டம் நீலகீரி மாவட்ட அனைத்து சிறு தேயிலை விவசாயிகளுக்கும் கிடைக்க ஆவன செய்யப்படும்.
3. சேரம்பாடி அரசு தேயிலைக் கோட்டத்தில் அமைந்துள்ள கோட்ட மருத்துவமனை 24 மணி நேரமும் செயல்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
4. தமிழ்நாடு தேயிலைக் கோட்டக் கழகத்தில் நீண்டகாலமாகப் பணியாற்றி வரும் தொழிலாளர்களை நிரந்தரமாக்குவது பற்றி பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
5. கூடலூர் அரசு மருத்துவமனை நவீனப்படுத்தப்படும்.