

1. திருவாரூரில் இயற்கை உரத்தொழிற்சாலை தொடங்கப்படும்.
2. திருவாரூரில் கூட்டுறவு சர்க்கரை ஆலை தொடங்கப்படும்.
3. திருவாரூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும்.
4. கொரடாச்சேரி ஒன்றியம் மணக்கால் அய்யம்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்தப்படும்.
5. கொரடாச்சேரி ஒன்றியம் கீரங்குடி ஊராட்சியில் சோழசூடாமணி ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்கப்படும்.
6. முத்துப்பேட்டை சுற்றுலா தலமாக அறிவிக்கப்படும்.
7. குடிக்கணி பகுதியில் வாழும் குத்தகை சாகுபடியாளர்களின் பட்டா சம்மந்தப்பட்ட கோரிக்கை பரிசீலிக்கப்படும்.
8. திருவாரூர் மாவட்டத்தில் முக்கிய நகரங்களில் உள்ள மயானங்களில் எரிவாயு தகன மேடை அல்லது மின்மயானம் அமைத்துத் தரப்படும்.
9. ஓடம்போக்கி ஆறு தூர்வாரப்படும்.
10. நன்னிலம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள ஏரிகள், குளங்கள் தூர்வாரப்படும்.
11. வெள்ளையாற்றின் குறுக்கே பாலம் அமைக்கப்படும்.
12. திருவாரூரில் தீயணைப்பு நிலையம் நவீனப்படுத்தப்பட்டு அதன் சேவைகள் மேம்படுத்தப்படும்.
13. திருத்துறைப்பூண்டியில் புறவழிச்சாலை அமைக்கப்படும்.
14. திருவாரூரில் அரசு இசைக் கல்லூரி தொடங்கப்படும்.