நாமக்கல் மாவட்ட தி.மு.க. தேர்தல் அறிக்கை

நாமக்கல் மாவட்ட தி.மு.க. தேர்தல் அறிக்கை
Updated on
1 min read

1. திருச்செங்கோடு தொகுதி, பரமத்தி வேலூர் தொகுதிமக்கள் பயன் அடையும் வகையில் காவிரி ஆறு - மணிமுத்தாறு நதிநீர் இணைப்புத்திட்டம் செயல்படுத்தப்படும்.

2. திருச்செங்கோடு அருகில் உள்ள காந்தி ஆசிரமம் சீரமைக்கப்பட்டு நல்ல முறையில் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்.

3. திருச்செங்கோடு புறவழிச்சாலை அமைக்கப்படும்.

4. காளப்பநாயக்கன்பட்டி, சேந்தமங்கலம், வாழவந்திகோம்பை ஆகிய பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் கொல்லிமலை அடிவாரம் காரவள்ளியில் மழைநீர் சேகரிப்புக் குளம் அமைக்கப்படும்.

5. இராசிபுரம் நகரைச் சுற்றிப் புறவழிச்சாலை அமைக்கப்படும்.

6. மோகனூர் வாய்க்கால், ராஜவாய்க்கால், குமாரபாளையம் வாய்க்கால் பாசனத் திட்டம் முழுவதும் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

7. பரமத்தி வேலூரில் செயல்பட்டு வந்த வெற்றிலை ஆராய்ச்சி மையம் மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்.

8. குமார பாளையம், பள்ளிப்பாளையம் சாயப்பட்டறைகளுக்கு பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும்.

9. நன்செய் இடையாறு அருகில் கூடுதுறையில் கதவணை கட்டும் திட்டம் விரைந்து முடிக்கப்படும்.

10. நாமக்கல்லில் முட்டைகள் சேமித்து வைக்க குளிர்பதனக் கிடங்கு அமைக்கப்படும்.

11. நாமக்கல் நகரைச் சுற்றிப் புறவழிச்சாலை அமைக்கப்படும்.

12. காவேரி உபரிநீர் சேலம் மாவட்டம் வழியாக திருமணிமுத்தாறு இணைப்பு, மல்ல சமுத்திரம் ஒன்றியம், புதுச்சத்திரம் ஒன்றியம், எருமைப்பட்டி ஒன்றியம் வழியாகத் திருச்சி மாவட்டம் காவேரியில் இணைக்கப்படும்.

13. நாமக்கல் முதல் திருச்சி வரை நான்கு வழிச் சாலை அமைக்கப்படும்.

14. நாமக்கல் நகரம், மோகனூர் பேரூர் இரண்டுக்கும் புதிய குடிநீர்த் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in