கடலூர் மாவட்ட தி.மு.க. தேர்தல் அறிக்கை

கடலூர்  மாவட்ட தி.மு.க. தேர்தல் அறிக்கை
Updated on
1 min read

1. திட்டக்குடி நகரில் புறவழிச்சாலை அமைக்கப்படும்.

2. திட்டக்குடி நகராட்சியாக ஆக்கப்படும்.

3. திட்டக்குடி வட்டத்தில் பாக்கம்பாடி அணையை உயர்த்தி, அதிக அளவில் நீரைத் தேக்கி மங்கலூர் ஒன்றியத்தில் 60 கிராமங்களுக்குப்பாசன வசதி செய்து தரப்படும்.

4. கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியம் கிள்ளை பேரூராட்சியில் உள்ள சின்னவாய்க்கால் முகத்துவாரம் தூர்ந்துபோவதைத் தடுக்க இரும்புத் தகடு சுவர் அமைத்துப் பாதுகாக்கப்படும்.

5. கள்ளப்பாடி - காவனூர் இடையே வெள்ளாற்றில் பாலம் அமைக்கப்படும்.

6. திருமுட்டம் ஆரம்ப சுகாதார நிலையம் அரசு மருத்துவமனையாகத் தரம் உயர்த்தப்படும்.

7. வீராணம் ஏரி சுற்றுலா மையமாக ஆக்கப்படும்.

8. விருத்தாசலம் நகருக்குப் புறவழிச் சாலை அமைக்கப்படும்.

9. விருத்தாசலத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும்.

10. விருத்தாசலத்தில் நீச்சல் குளம் அமைத்து அரசு விளையாட்டு அரங்கம் தரம் மேம்படுத்தப்படும்.

11. கடலூர் துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

12. கடலூர் சிப்காட் பகுதியில் இரசாயன ஆலையிலிருந்து வெளியேறும் கழிவு நீரைச் சுத்திகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

13. சிதம்பரம் நகரில் பாதாள சாக்கடைத் திட்டம் விரிவுபடுத்தப்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in