

மோடியின் அந்தரங்க வாழ்க்கை குறித்த விவரங்களில் காங்கிரஸ் மூக்கை நுழைப்பது ஏன் என சிவ சேனை கேள்வியெழுப்பியுள்ளது.
இது தொடர்பாக சிவ சேனையின் அதிகாரப்பூர்வ நாளிதழான சாம்னாவில் தலையங்கப் பக்கத்தில் எழுதியிருப்பதாவது: மோடியின் திருமணம் வெறும் சம்பிரதாயத்துக்காக நடந்தது. சுவாமி சமர்த் ராம்தாஸ் தனது திருமணச் சடங்குகளில் பாதியி லேயே ஓடி விட்டார். அவர் சமூகத்துக்கு தனது வாழ்வை அர்ப்பணித்தார்.
அதைப் போலவே, மோடி ஆர்எஸ்எஸ் பிரச்சாரகராக மாறி விட்டார். யசோதா பென் புகார் எதுவும் தெரிவிக்காதபோது, காங்கிரஸ் ஏன் அவருக்காக குரல் கொடுக்கிறது.
இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் ராகுல்காந்தி, மோடியின் அந்தரங்க விஷயங்கள் குறித்து விமர்சிக்கிறார். யசோதாபென் குறித்து அக்கறை காட்டும் காங்கிரஸ், மர்மமான முறையில் இறந்து கிடந்த சுனந்தா புஷ்கர் குறித்து ஏன் அக்கறை காட்டக் கூடாது?.
சில முட்டாள்கள், கண்ணை மூடிக்கொண்டு தங்கள் தவறு களை மறந்து விட்டு, அடுத்தவர்க ளின் குறைகளைப் பற்றி ஆய்வு செய்து கொண்டிருக்கின்றனர்.
மோடியின் திருமணத்துக்கும், சாமான்ய மக்களின் பிரச்சினைக ளான விலைவாசி உயர்வு, ஊழல் போன்றவற்றுக்கும் என்ன தொடர்பு?
இதைப் பற்றிப் பேசிக் கொண் டிருந்தால், அண்டை நாடுகளில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான செயல் பாடுகள் நிறுத்தப் படுமா, தாவூத் இப்ராஹிம் இந்தியாவுக்குக் கொண்டு வரப்படுவாரா, மகாராஷ் டிரத்தில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது முடிவுக்கு வந்துவிடுமா?
மோடி தன் மனைவி பெயரை வேட்புமனுவில் குறிப்பிடாமல் விட்டுவிட்டதால், குஜராத்தின் வளர்ச்சி தடைபட்டுவிடவில்லை என தலையங்கத்தில் தெரிவிக் கப்பட்டுள்ளது.