

1. கை களத்தூர் ஏரி தூர்வாரப்பட்டு விவசாயத்திற்கும் குடிநீருக்கும் தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.
2. கை களத்தூரில் நூலகம் கட்டப்படும்.
3. பெரம்பலூர் திருச்சி நெடுஞ்சாலை சிறுவாச்சூரில் ஓர் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
4. பெரம்பலூரில் கூடுதல் உரிமையியல் நீதிமன்றம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
5. பெரம்பலூர் நகருக்குக் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர்த் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, பெரம்பலூர் நகர் மக்களின் குடிநீர்த் தேவை நிறைவு செய்யப்படும்.
6. பெரம்பலூர் மாவட்டம் எரையூரில் உள்ள நேரு சர்க்கரை ஆலையில் இரண்டாம் அலகு மீண்டும் செயல்படவும், இணை மின் உற்பத்தி செய்யும் திட்டம் நிறைவேற்றப்படவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
7. பெரம்பலூரில் முந்தைய கழக ஆட்சியில் தொடங்கப்பட்டு, தற்போது முடக்கி வைக்கப்பட்டுள்ள சிறப்புப் பொருளாதார மண்டலம் மீண்டும் செயல்படத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
8. பெரம்பலூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் எல்லைப்பகுதியில் அவசர விபத்து சிகிச்சை மையம் தொடங்கப்படும்.
9. லெப்பைக் குடிகாடு மற்றும் பெரம்பலூரில் பாதாள சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்படும்.
10. லெப்பைக் குடிகாடு பேரூராட்சியில் அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்படும்.
11. முந்தைய கழக ஆட்சியில் நிதி ஒதுக்கீடு செய்து அடிக்கல் நாட்டப்பட்டு அ.தி.மு.க அரசால் கிடப்பில் போடப்பட்டுள்ள குன்னம்
மருத்துவக் கல்லூரி பணிகள் விரைந்து முடிக்கப்படும்.
12. பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி பூலாம்பாடி பேரூராட்சியில் கலிங்க ஓடை நீர்த் தேக்கத் திட்டம் நிறைவேற்றப்படும்.
13. பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி மலையாளப்பட்டி சின்ன முட்டு நீர்த் தேக்க அணைத் திட்டம் நிறைவேற்றப்படும்.
14. 1956 ஆம் ஆண்டில் நெய்வேலி நிலக்கரித் திட்டம் தொடங்கப்பட்ட நேரத்தில் மாற்று நிலமாக வழங்கப்பட்ட புதுக்கரைப்பேட்டை,
விஜயமாநகரம் ஆகிய பகுதிகளில் உள்ள நிலங்களுக்கு இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. ஏறத்தாழ 3291 ஏக்கர் புஞ்சை நிலத்திற்கும்
568 ஏக்கர் தரிசு நிலத்திற்கும் பட்டா வழங்கப்பட வேண்டும். கழக ஆட்சி காலத்தில் இந்த நிலங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்
என்று உறுதியளிக்கப்பட்டது. அதனடிப்படையில் பட்டா வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.