மாரிதாஸுக்கு மீண்டும் சிறை :

மாரிதாஸுக்கு மீண்டும் சிறை :
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் போலீஸில் பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கில் யூடியூபர் மாரிதாஸ் நேற்று கைது செய்யப்பட்டார்.

சமூகங்களுக்கு இடையே மோதல் ஏற்படும் வகையில் 2020 ஏப். 2-ல் மாரிதாஸ் யூடியூப் சேனல் ஒன்றில் பேசியதாக, மேலப்பாளையம் போலீஸில் முகம்மது காதர் மீரான் என்பவர் புகார் அளித்தார்.

அதன்பேரில், மாரிதாஸ் மீது 4 பிரிவுகளின்கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

இவ்வழக்கில் மேலப்பாளையம் போலீஸார் மாரிதாஸை கைது செய்தனர். திருநெல்வேலி 5-வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி விஜயலட்சுமி முன்னிலையில் நேற்று அவரை ஆஜர்படுத்தினர். டிச.30 வரை அவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். தேனி மாவட்ட சிறையில் மாரிதாஸ் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் மாரிதாஸ் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in