சாலை மறியல் :

சாலை மறியல் :

Published on

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே மட்டங்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆர்.சரண்ராஜ்(30). கல்லாக்கோட்டையில் தனியார் மதுபான தொழிற்சாலையில் ஒப்பந்த பணியில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார்.

இவர், தொழிற்சாலை வளாகத்தில் உள்ள மரத்தில் நேற்று முன்தினம் சடலமாக தூக்கில் தொங்கினார்.அவரது உடல், பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இவ்வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து, மதுபானத் தொழிற்சாலை நிர்வாகத்தினரை விசாரிக்க வலியுறுத்தி சரண்ராஜின் உறவினர்கள் மட்டங்காலில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் சமாதானப்படுத்தினர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in