தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தைத் தடுக்க வேண்டும் : பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

தமிழகத்தில் போதைப்பொருள்  புழக்கத்தைத் தடுக்க வேண்டும் :  பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்
Updated on
1 min read

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தைத் தடுக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியது: மாரிதாஸை பழிவாங்கும் வகையில் செயல்படுகிற அரசு, மக்களுக்கானதாகவோ, கருத்து சுதந்திரத்துக்கானதாகவோ இருக்க முடியாது.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகள், நிறுவனங்களில் இதுவரை ஊழல் தடுப்புப் பிரிவினர் நடத்திய சோதனை மூலம் எத்தனை பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்ன வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது? என்பது தெரியவில்லை. இதன்மூலம், ஏதோ ஒரு காலத்தில் பயன்படுத்துவதற்காக வழக்குகளைப் பதிவு செய்து சேர்த்து வருகின்றனர் என்பது தெரிகிறது. தமிழகத்தில் கடந்த 6 மாதங்களில் போதைப்பொருள் புழக்கம் அதிகமாகியுள்ளது. எனவே, உடனடியாக போதைப் பொருள் விற்பனையைத் தடை செய்து, தொடர்புடையவர்களைக் கைது செய்ய வேண்டும். இதேபோல, லாட்டரி விற்பனையையும் தடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in