

கோவையில் 27 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சி பகுதிகளைச் சேர்ந்த 21 பேர், புறநகர் பகுதிகளைச் சேர்ந்த 6 பேர் டெங்கு காய்ச்சல் காரணமாக அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து, மாநகரில் வீடுகள்தோறும் ஆய்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பணியில் 800 பேர் ஈடுபடுத்தப்பட்டனர். தற்போது காய்ச்சல் அதிகரித்து வருவதால் கூடுதலாக 200 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் வீடுகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.
“தண்ணீர் தேங்கி கொசுப்புழு உருவாக காரணமாகும் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. கொசுப்புழுக்களை அழிக்க அபேட் மருந்து தெளிக்கப்படுகிறது. இதுவரை ரூ.1.65 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது” என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.