புதுச்சேரி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு - ரேடியோகிராபி இயந்திரம் வாங்க ரூ.9.52 கோடிக்கு ஆளுநர் ஒப்புதல் :

புதுச்சேரி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு -  ரேடியோகிராபி இயந்திரம் வாங்க ரூ.9.52 கோடிக்கு ஆளுநர் ஒப்புதல்  :
Updated on
1 min read

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் 11-ம் தேதி வந்த முக்கிய கோப்புகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி புதுச்சேரி ராஜீவ் காந்தி பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையின் பயன்பாட்டுக்கு கணினி மயமாக்கப்பட்ட ரேடியோகிராபி இயந்திரம் ஒன்று வாங்குவதற்கு ரூ.9.52 கோடி அளிக்க ஒப்புதல் அளித்துள்ளார்.

பாசிக் நிறுவனத்தை மீட்டெடுக் கவும், லாபகரமாக இயக்கவும், மூலதனமாக இரண்டாவது தவணையாக ரூ.2 கோடி அளவுக்கு நிதிக்கொடை வழங்க ஒப்புதல் அளித்துள்ளார். சென்டாக் மூலம் தேர்வு செய்யப்பட்டு மருத்துவம், தொழில்நுட்பம், செவிலியர் பாடப் பிரிவுகளின் பல்வேறு வகுப்புகளில் பயிலம் மாணவர்களுக்கு பெருந்தலைவர் காமராஜர் நிதியுதவித் திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள நிதியுதவித் தொகை வழங்குவதற்கு ரூ.15.34 கோடி நிதிச் செலவுக்கு ஒப்புதல் தந்துள்ளார். இத்தகவலை ஆளுநர் செயலகம் தெரிவித்துள்ளது.

மாணவர்களுக்கு நிதியுதவித் தொகை வழங்குவதற்கு ரூ.15.34 கோடி நிதிச் செலவுக்கு ஒப்புதல் தந்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in