மீன்வளர்ப்பு திட்டத்தில் மானியம் :

மீன்வளர்ப்பு திட்டத்தில் மானியம் :
Updated on
1 min read

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சிறிய அளவிலான பயோபிளாக் முறையில் 7 தொட்டிகள் அமைத்து மீன் வளர்ப்பு செய்யும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்துக்கு அலகு ஒன்றுக்கு ரூ. 7.50 லட்சம் செலவாகும். பொது பயனாளிகளுக்கு 40 சதவீத மானியமாக ரூ.3 லட்சம்வழங்க நிதி ஒப்பளிப்பு பெறப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் நாகர்கோவில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று உரிய ஆவணங்களுடன் வரும் 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு வடசேரி டிஸ்டில்லரி சாலையில் உள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை, மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in