

பெண்களின் முன்னேற்றத்துக்கு சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு அவ்வையார் விருது வழங்கப்பட வுள்ளது.
இவ்விருதுக்கு விண்ணப்பிப்போர் தமிழகத்தை பிறப்பிடமாகக் கொண்ட, 18 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும். மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் பெண் குலத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில் தொடர்ந்து பணியாற்றுவோராக இருத்தல் வேண்டும். இதற்கான விண்ணப்பத்தை மாவட்ட சமூகநல அலுவலகத்தில் பெற்று, வரும் 26-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இத்தகவலை மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் தெரிவித்துள்ளார்.