

கோவில்பட்டியில் உள்ள செயற்கை புல்வெளி மைதானத்தில் 11-வது தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டிகள் இன்று தொடங்குகிறது.
கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில், 11-வது தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டி இன்று (16-ம் தேதி) தொடங்குகிறது. மாலை 5 மணியளவில் நடக்கும் விழாவில், தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், ஹாக்கி இந்தியா தலைவர் ஞானேந்திரன் கோம் ஆகியோர் போட்டியை தொடங்கி வைக்கின்றனர். முதல் நாளான இன்று 5 ஆட்டங்கள் நடக்கின்றன. முதல் ஆட்டத்தில், ஹரியானா ஹாக்கி அணியும், தெலங்கானா அணியும் மோதுகின்றன. ஏற்பாடுகளை ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு தலைவர் சேகர் ஜே.மனோகரன் மற்றும் உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.
கிராமங்களில் மைதானம்