சந்தவாசல் பகுதியில் இன்று மின் நிறுத்தம் :

சந்தவாசல் பகுதியில் இன்று மின் நிறுத்தம் :
Updated on
1 min read

சந்தவாசல் துணை மின் நிலை யத்துக்கு உட்பட்ட பகுதியில் இன்று மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

இது தொடர்பாக சந்தவாசல் துணை மின் நிலையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘‘சந்தவாசல் துணை மின் நிலையத்தில் அத்தியவாசிய மின் பராமரிப்புப் பணிகள் இன்று (டிச.16) மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே, இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கல்வாசல், சந்தவாசல், ஏரிக்குப்பம், பாளையம், நடுக்குப்பம், கேளூர், ஆத்து வாம்பாடி, விளாங்குப்பம், வடமாதிமங்கலம், கஸ்தம்பாடி, படவேடு, ஒண்ணுபுரம், வண்ணாங்குளம், மேல்நகர், கண்ண மங்கலம், கொளத்தூர், குப்பம், வாழியூர், காளசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது’’ என தெரிவிக்கப் பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in