சாலையில் மீட்கப்பட்ட நட்சத்திரஆமை : திருப்பூர் வனத்துறையிடம் ஒப்படைப்பு

சாலையில் மீட்கப்பட்ட நட்சத்திரஆமை  :  திருப்பூர் வனத்துறையிடம் ஒப்படைப்பு
Updated on
1 min read

திருப்பூர் பூலுவப்பட்டி பழனிசாமி நகரை சேர்ந்தவர் சிவானந்தம் (36). பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று காலை பூலுவப்பட்டி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, சாலையில் ஆமை நகர்ந்து செல்வதைக் கண்டார். அதை மீட்டு, வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். வனத்துறை ஊழியர் சிவமணி சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது, அது அரியவகை நட்சத்திர ஆமை என்பது தெரியவந்தது.

இதையடுத்து நஞ்சராயன் குளத்தில் நட்சத்திர ஆமை பாதுகாப்பாக விடப்பட்டது. அரிய வகை நட்சத்திர ஆமை எப்படி சாலைக்கு வந்தது என்பதுகுறித்து விசாரித்து வருவதாக வனச்சரக அலுவலர் செந்தில்குமார் தெரிவித்தார்.திருப்பூரில் நேற்று மீட்கப்பட்ட நட்சத்திர ஆமை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in