விதைச்சான்று இயக்ககத்தை சென்னைக்கு இடம் மாற்ற எதிர்ப்பு தெரிவித்து - காய்கறி விதைகளுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் :

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, காய்கறி விதைகளுடன் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாய அமைப்பினர்.    படம்: ஜெ.மனோகரன்
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, காய்கறி விதைகளுடன் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாய அமைப்பினர். படம்: ஜெ.மனோகரன்
Updated on
1 min read

கோவையில் இயங்கும் விதைச் சான்று மற்றும் அங்ககச்சான்று இயக்ககத்தை சென்னைக்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து விவசாய அமைப்பினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு அரசின் விதைச் சான்று மற்றும் அங்ககச்சான்று இயக்ககம், கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு, தடாகம் சாலையில் கடந்த 50ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவருகிறது. அரசு விதைப் பண்ணைகள், விதை உற்பத்தி மையங்கள், வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஆகிய அரசு, அரசு சார்ந்த விதைஉற்பத்தி மையங்களில் இருந்தும்,தனியார் விதை உற்பத்தி மையங்களில் இருந்தும் தயாரிக்கப்படும் விதைகள், இங்கு பரிசோதிக்கப்பட்டு சான்றிதழ் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த அலுவலகம் சென்னைக்கு இடம் மாற்றம் செய்யப்படும் என்ற அரசின் அறிவிப்பை திரும்ப பெறக்கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்டக் குழு சார்பில், மாவட்டத் தலைவர் சு.பழனிசாமி தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது, காய்கறி விதைகளை மாலையாகவிவசாயிகள் கழுத்தில் அணிந்திருந்தனர். பின்னர், சு.பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘தமிழக முதல்வராக இருந்தகருணாநிதியின் ஆட்சிக் காலத்தில்தான், கோவையில் 3 ஏக்கர் பரப்பளவில் கட்டிடம் கட்டப்பட்டு விதைச்சான்றளிப்பு மற்றும் அங்ககச்சான்றளிப்பு இயக்ககம் தொடங்கப்பட்டது.தற்போதுஇதன் மதிப்பு ரூ.100 கோடி ஆகும்.இம்மையத்தை சென்னைக்கு மாற்றக்கூடாது என தமிழக முதல்வரிடம் நேரடியாக மனு அளித்துள்ளோம். கோவையிலுள்ள விதைச்சான்று இயக்ககத்துக்கு 17 மாவட்டங் களைச் சேர்ந்த விவசாயிகள் வந்து செல்கின்றனர்.

இம்மையத்தை சென்னைக்கு மாற்றுவதால் விவசாயிகள் மன உளைச்சல் அடைவதோடு, சிரமத்தையும் எதிர்கொள்வர். இம்மையம் கோவையிலேயே இயங்கும் என்ற அறிவிப்பை முதல்வர் வெளியிட வேண்டும்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in