

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாவிலும் இன்று பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது, என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் இன்று (15-ம் தேதி) பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. நாமக்கல் தாலுகாவில் தொட்டிப்பட்டி, அணியார், நரவலூர், அக்ஹாரம், காரைக்குறிச்சி, சேந்தமங்கலம் தாலுகாவில் பொன்னர்குளம், மேளப்பட்டி, முட்டாஞ்செட்டி, ராசிபுரம் தாலுகாவில் குருக்கபுரம், வெண்ணந்தூர், கார்கூடல்பட்டி, மோகனூர் தாலுகாவில் என்.புதுப்பட்டி, திப்பரமகாதேவி, மணப்பள்ளி ஆகிய கிராமங்களில் முகாம் நடைபெற உள்ளது.
இதுபோல் திருச்செங்கோடு தாலுகாவில் நாகர்பாளையம், தொண்டிப்பட்டி, புதுப்புளியம்பட்டி, நல்லிபாளையம், மரப்பரை, போக்கம்பாளையம், பரமத்தி- வேலூர் தாலுகாவில் புஞ்சை இடையார் மேல்முகம், கோதூர் அக்ஹாரம், தேவராய சமுத்திரம், வடகரை ஆத்தூர் மேல்முகம், குமாரபாளையம் தாலுகாவில் ஓடப்பள்ளி அக்ரஹாரம், பள்ளிப்பாளையம் ஆகிய கிராமங்களில் பட்டா மாறுதல் முகாம் நடைபெற உள்ளது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.