

காரிமங்கலம் காவல் உதவி ஆய்வாளர்கள் செல்வராஜன், கண்ணம்மாள் ஆகியோர் தலைமையிலான தனித்தனி குழுக்கள் காரிமங்கலம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, காரிமங்கலம் அடுத்த ஏரியின் கீழுர் பகுதியில் பிரசாத் (27) என்பவர் பெட்டிக் கடையில் டீசல் பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிய வந்தது. எனவே, அவரை கைது செய்த போலீஸார் அவரிடம் இருந்து 5 லிட்டர் டீசலை பறிமுதல் செய்தனர்.
மணிக்கட்டியூரில் பெட்டிக்கடையில் டீசல் விற்ற சபரிநாதன் (34) என்பவரும் கைது செய்யப்பட்டு 5 லிட்டர் டீசல் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல, மணிக்கட்டியூர் பகுதி கமலக்கண்ணன் (29), அசோகன் (50) ஆகியோரும் கடைகளில் டீசல் பதுக்கி விற்ற காரணத்துக்காக கைது செய்யப்பட்டனர்.