சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை :

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை :
Updated on
1 min read

புதுக்கோட்டை மாவட்டம் மண்டையூர் அருகே வாத்திரா மேடு பகுதியைச் சேர்ந்தவர் சின்னசாமி மகன் மாரிமுத்து(34). தொழிலாளியான இவரை, மார்ச் மாதம் ஒரு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் கைது செய்தனர்.

புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட மாரிமுத்துக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சத்யா நேற்று தீர்ப்பளித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in