திருச்சேறை கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு :

திருச்சேறை கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு :
Updated on
1 min read

கும்பகோணம்: 108 திவ்ய தேசங்களில் ஒன்றான, ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருச்சேறை சாரநாதப் பெருமாள் கோயிலில் பெருமாள் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டு வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி, கோயிலில் பகல்பத்து நிகழ்வு முடிந்து நேற்று இராப்பத்து நிகழ்ச்சி தொடங்கியது. இராப்பத்து நிகழ்வின் தொடக்க நாள், வைகுண்ட ஏகாதசியையும் முன்னிட்டு நேற்று அதிகாலை 5.30 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பட்டது. அப்போது, உற்சவர் சாரநாதப் பெருமாள் சொர்க்கவாசல் வழியாக பிரவேசித்தார். பின்னர், கோயில் உட்பிரகாரத்தில் புறப்பாடு நடைபெற்றது. அப்போது ஏராளமான பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in