

மயிலாடுதுறை மகாதான தெருவில் பள்ளிகள், கோயில்கள் அருகே டாஸ்மாக் கடை உள்ளது. இதனால், பக்தர்கள், மாணவ, மாணவிகள், பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இந்த கடையை அகற்ற வலியுறுத்தி, பாஜக சார்பில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
கட்சியின் மாநில ஓபிசி அணி துணைத் தலைவர் அகோரம் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் தங்க.வரதராஜன், மாவட்டத் தலைவர் வெங்கடேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
டாஸ்மாக் துணை மேலாளர் சங்கர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இப்பிரச்சினை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இன்னும் 10 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்கிறோம் என்று உறுதி அளித்தார். அதன்பேரில் நேற்று மதியம் உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது.